Asianet News TamilAsianet News Tamil

அவதூறு வழக்கு... நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் ஆஜர்!

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் ஆஜராகியுள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.

MK Stalin in court
Author
Chennai, First Published Oct 24, 2018, 10:42 AM IST

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் ஆஜராகியுள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். MK Stalin in court

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்பாக அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரியும், நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரியும் மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதி, இந்த வழக்குகள் தொடர்பாக மு.க. ஸ்டாலின் 2 வாரத்தில் சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தொடர்ந்து ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்றுக்கொள்ளலாம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்குகள் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. 

MK Stalin in court 

இந்நிலையில் இதை ஏற்க மறுத்த நீதிபதி முதல்முறை ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது. கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று கூறியது. பிறகு அவர் விலக்கு பெற்றுக்கொள்ள வேண்டும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் அவதூறு வழக்கின் விசாரணைக்காக சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராகியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios