கோவையில் 3 கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது என மு.க.ஸ்டாலின் முதல்முறையாக இந்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

கருப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு தமிழக முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கருப்பர் கூட்டத்தின் பின்னணியில் திமுக ஆதரவாளர்கள் இருப்பதாக குரல்கள் எழுந்தன. தொடக்க முதலே இதற்கு பின்னால் திமுக இருப்பதாக பாஜக குற்றம்சாட்டி வந்தனர். மேலும் இந்த விவகாரத்தில் திமுக உடனே கருப்பர் கூட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்றும் தொடர்ச்சியாகவே கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றியவர்களை உடனடியாக கண்டித்த ஸ்டாலின் பல கோடி இந்துக்களின் முப்பாட்டனான முருகனை அவமதித்தவர்களுக்கு எதிராக ஏன் எதுவும் கூறவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், கோவையில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 4 கோவில்கள் முன்பு டயர்களை தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் தொடர்புடைய மர்ம ஆசாமிகளை பிடிக்க 6 தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவத்துக்கு முதல்முறையாக இந்துக்களுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்துள்ளார். 

 

 

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- கோவையில் நேற்று மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. பேரிடர் காலத்தில் அதிமுக்கியப் பிரச்சினைகளிலிருந்து, பொது கவனத்தை திசை திருப்பாதவண்ணம், குற்றம் புரிந்தோர் உடனடியாக சட்டத்தின் முன்னே நிறுத்தப்படுவதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.