mk stalin condolance for krishnasamy death

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆண்டு தோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வை நீக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

திருத்துறைப்பூண்டியில் இருந்து எர்ணாகுளத்திற்கு நீட் தேர்வு எழுத தன்னுடைய மகனுடன் சென்ற தந்தை 
கிருஷ்ணசாமி, மகனை தேர்வு மையத்திற்குள் அனுப்பி விட்டு வந்த போது திடீர் என மாரடைப்பு ஏற்பட்ட மரணமடைந்தார். 

இந்நிலையில் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, ஆண்டு தோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வை நீக்கக்கோரி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, நீட் தேர்வு எழுதும் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமியின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.