Asianet News TamilAsianet News Tamil

சிவகங்கையில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட மு.க ஸ்டாலின் ...! எங்கு பார்த்தாலும் பெரியகருப்பன் மயம்.

இதனால் வீரர்கள் காளைகளை உற்சாகமாக அடக்கி வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு வாடிவாசல்கள் முழுவதும் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் நிரம்பி இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உருவம் பதித்த டி-ஷர்ட் அணிந்து மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கி வருகின்றனர்

.

MK Stalin completely ignored in Sivagangai ...! Periyakaruppan religion everywhere.
Author
Chennai, First Published Jan 17, 2022, 2:36 PM IST

சிவகங்கையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் திரும்பிய பக்கமெல்லாம் அமைச்சர் பெரியகருப்பனின் புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது, அதே நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் படங்களோ, உதயநிதியின்  படங்களோ முற்றிலும் தவிர்க்கப்படிருப்பது திமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  அதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது . கடந்த 2005ஆம் ஆண்டு முதல் தற்போது வரை திமுகவின் சிவகங்கை மாவட்ட செயலாளராக செயல்பட்டு வருகிறார் பெரியகருப்பன். 2006- 2011 மற்றும் 2016 சட்டப்பேரவை தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். தொடர்ந்து 4-வது முறையாக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று தற்போது அமைச்சராகவும் இருந்து வருகிறார் பெரிய கருப்பன்.

கடந்த 2006ஆம் ஆண்டு திமுகவில் வெற்றிபெற்று அமைச்சரவையில் இந்து சமய அறநிலை துறை அமைச்சராக பதவி வகித்தார் பெரியகருப்பன். அதைத்தொடர்ந்து தற்போது தமிழக அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். எப்போதும் திமுகவிலிருந்து சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாகவே  அறியப்படுகிறார் பெரிய கருப்பன். மோசடி புகார் பாலியல் குற்றச்சாட்டு என பலப்பல சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாதவர் பெரியகருப்பன். சிறுவயது முதலே அரசியலில் ஆர்வம் கொண்ட அவர் சென்னை நியூ கல்லூரியில் பிகாம் பட்டமும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றவர் ஆவார். அடிப்படையில் வழக்கறிஞரான பெரியகருப்பன் மாணவப் பருவம் தொட்டு திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்து அரசியலில் ஈடுபட தொடங்கினார். படிப்படியாக உயர்ந்து 1999ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் திமுக செயலாளராக உயர்ந்த பெரியகருப்பன் 2006 ஆண்டு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது அமைந்த அதிமுக அமைச்சரவையில் குடிசைமாற்று வீட்டு வசதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

MK Stalin completely ignored in Sivagangai ...! Periyakaruppan religion everywhere.

பின்னர் அறநிலைத்துறை இவரிடம் கொடுக்கப்பட்டது. 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அறநிலையத்துறையில் பல திட்டங்களையும் புதிய மாற்றங்களையும் கொண்டு வந்தவர் ஆவார். பல்வேறு காணாமல்போன சிலைகளை மீட்க இவர் அமைச்சராக இருந்தபோது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் திமுகவுக்கு  எதிரான அலை பெரிதாக வீசியது, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணியும் வெறும் 31 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்திருந்த அந்தத் தேர்தலிலும் பெரியகருப்பன் திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெற்று திருப்பத்தூர் திமுகவின் கோட்டை என்பதை நிரூபித்தார். இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி அப்போதைய அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு, பெரியகருப்பன் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

அடுத்த நடைபெற்ற 2016 மற்றும் 2021  ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் திருப்பத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார் பெரியகருப்பன். திருப்பத்தூர் தொகுதியில் நான்கு முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ள பெரியகருப்பன் இந்தமுறை அமைந்திருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். திருப்பத்தூரில் பெரியகருப்பன் தொடர் வெற்றிக்கு காரணம் அவரது செல்வாக்கு தான், பெரியகருப்பன் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் போன்றவை செயல்படுத்தி மக்களின் மனதில் தவிர்க்க முடியாத அளவிற்கு சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார் அவர்.  மேலும் விழாக்கள், திருமணம்,  சுப நிகழ்வுகள், துக்க நிகழ்வுகளிலும் தவறாமல் கலந்து கொள்ளும் வழக்கத்தையும் வைத்திருக்கிறார் பெரியகருப்பன். 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான தனது காலகட்டத்தில் அறநிலையத்துறையில் எப்படி சிறப்பாக செயல்பட்டாரோ அதை விட சிறப்பாக  ஊரக வளர்ச்சித் துறையில் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

MK Stalin completely ignored in Sivagangai ...! Periyakaruppan religion everywhere.

இந்நிலையில்தான் கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலமாகவே ஜல்லிக்கட்டு காளைகளை, மாடுபிடி வீரர்களையும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு இடத்திற்கும் பார்வையாளர்களாக 150 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அலங்கா நல்லூர், பாலமேடு போன்ற இடங்களில்  வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி  ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைத்துள்ளார். களம் இறங்கும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு தலா ஒரு தங்கக்காசு பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் சிறந்த காளைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் தங்க காசு, புதிய கார் பரிசு வழங்கப்பட உள்ளது.  அதேபோல் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் மாடுகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கு தங்க காசு பரிசாக வழங்கப்பட உள்ளது. இது தவிர பல்வேறு பரிசு பொருட்களும் வழங்கப்பட உள்ளன. இதனால் வீரர்கள் காளைகளை உற்சாகமாக அடக்கி வருகின்றனர்.

பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு வாடிவாசல்கள் முழுவதும் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் நிரம்பி இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உருவம் பதித்த டி-ஷர்ட் அணிந்து மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க  சிவகங்கையில் நடந்து வரும் போட்டிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர் பெரியகருப்பன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போட்டிகளை கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மற்றும் வாடி வாசல்களில் ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் பெரியகருப்பனின் பெயர்கள், பெரிய அளவிலான பேனர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

MK Stalin completely ignored in Sivagangai ...! Periyakaruppan religion everywhere.

மாடுபிடி வீரர்களும் பெரியகருப்பன் உருவம் பதித்த டீசர்ட்களை அணிந்து காளைகளை அடக்கி வருகின்றனர். ஆனால் அங்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படமோ அல்லது திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதியின் புகைப்படங்களோ இல்லை என்பது குறிப்பிடதக்கது.  சிவகங்கையில் முற்றிலும் ஸ்டாலின் புறக்கணிக்கப்பட்டு எங்கு பார்த்தாலும் பெரியகருப்பன் மயமாக இருக்கிறது என பலரும் சமூகவலைதளத்தில் அதற்கான ஆதாரங்களை பதிவிட்டு வருகின்றனர். இது தற்போது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios