நம் தமிழகத்தின் கம்பீரமான பிரதிநிதியான முதல்வர் இவ்வாறு தவறாக விளிக்கிறார் என்றால் நம் தமிழகத்திற்குத் தானே அது தலைகுனிவு! குறை ஒன்றும் இல்லை கண்ணா என்று இந்தப் பிரச்சனையில் நகர முடியாதே.

பீகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து எதிா்க்கட்சிகள் சாா்பிலான வாக்குரிமை பயணத்தை நடத்தி வருகிறார் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி. இந்நிலையில் நேற்று பீகாரில் நடைபெற்ற வாக்குரிமை பேரணியில் ராகுல் காந்தியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் பேரணியில் கலந்து கொண்டனர்.

பேரணிக்குப் பின்னர் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘ மை டியர் பிரதர் ராஜீவ் காந்தி அவர்களே..! என அழைத்தார். ராகுல் காந்தி என அழைப்பதற்கு பதிலாக அவரது தந்தை ராஜீவ் காந்தி பெயரைச் சொல்லி அழைத்தது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. மு.க.ஸ்டாலின் இப்படி மாற்றி அழைத்துப் பேசிய வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சமீபத்தில் பாஜகவில் இணைந்துள்ள ஆர்.கே.ராதாகிருஷ்ணன், ‘‘முதல்வர் ஸ்டாலின் பீகாரில் உள்ள பாட்னாவிற்கு தனி விமானத்தில் ஏறி சென்று கூட்டத்தில் ‘ராகுல் என விளிக்காமல்’ அவரின் மறைந்த தந்தை ராஜீவ் காந்தி என அழைக்கிறார். பாட்னா சென்று தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் எப்போதும் போலப் பிழையில்லாமல் பேசுவதாக நினைத்துக் கொண்டு மை டியர் பிரதர் ராகுல் காந்தி என்று அழைப்பதற்கு பதிலாக மை டியர் பிரதர் ராஜிவ் காந்தி என்று அழைத்துப் பேசியிருக்கிறார்.

மிக ஆபத்தானவர் ஸ்டாலின் என்பார்கள். எந்த நினைவுமற்று அவர் இவ்வாறு பேசிக் கொண்டிருப்பது தமிழகத்திற்கு தலைக்குனிவா? இல்லை ஸ்டாலினுக்குத் தலை குனிவா? நம் தமிழகத்தின் கம்பீரமான பிரதிநிதியான முதல்வர் இவ்வாறு தவறாக விளிக்கிறார் என்றால் நம் தமிழகத்திற்குத் தானே அது தலைகுனிவு! குறை ஒன்றும் இல்லை கண்ணா என்று இந்தப் பிரச்சனையில் நகர முடியாதே. பட்ட அவமானம் பட்டதுதான் ! அவருக்கு யாராவது சொல்லி புரியவைங்கயா, ராஜீவ் காந்தி இறந்து 34 வருஷம் ஆச்சுன்னு. இதை துண்டு சீட்டில் எழுத்தில் கொடுத்த பிரகஸ்பதி யாரோ"

Scroll to load tweet…

ஸ்டாலின் அவர்களே, பிகார் என்றாலே உங்களுக்கு காங்கிரஸின் அவசரநிலையை எதிர்த்த ஜெயபிரகாஷ் நாராயணின் அமைதியான முழு புரட்சி (Total Revolution) நினைவில் வர வில்லையா? ஊழல் வழக்கில் சிறை சென்ற லாலு பிரசாத் யாதவ் மட்டுமே உங்க நினைவுக்கு வருகிறார். கொடுமை. லாலு உங்க குடும்ப போல வாரிசு அரசியல் ரகம்… ஜோடி சரிதான்’’ எனத் தெரிவித்துள்ளார்.