சமீபகாலமாக கட்சியில் தங்கை கனிமொழி ஸ்டாலினால் டம்மியாக்கப்படும், பிரச்சனையை எல்லாமே புரிந்தும், அதிரடியாய் எதையும் செய்ய இயலாதவராய் இருக்கிறாராம் ராசாத்தி.

அரசியலில் பெண் சக்தி எப்படிபட்ட ஃபவர்புல்லானது என்பதை ஜெயலலிதா நாளுக்கு நாள் துல்லியமாக பார்த்து பிரமித்தவர் ஸ்டாலின். என்னதான் எதிரி கட்சியாக இருந்தாலும் ஜெயலலிதாவின் ஆளுமையை அவர் புகழாமல் இருந்ததில்லை, அதனால்தானோ என்னவோ சொந்த தங்கையான கனிமொழியை தன் கட்சியில் வளரவே விடமாட்டேங்கிறார் போல மனுஷன்! என்று திமுக. ஸ்டாலினுக்கு எதிராக மிக கடுமையாகவே விமர்சனங்கள் மகளிர் அணியிலிருந்து வெடித்துள்ளது. 

கருணாநிதி மறைவுக்குப் பின் கனிமொழியே தன்னை நிரூபிக்க நினைத்தாரோ?, அல்லது ஸ்டாலின் தான் அவருக்கு தேர்தல் அரசியலின் சவால்களை காட்ட நினைத்தாரோ? அல்லது கனிமொழிக்கு கட்சியிலும், மக்களிடத்திலுமுள்ள செல்வாக்கை எடை போட நினைத்தாரோ தெரியவில்லை அவரை தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வைத்தார். எதிரில் பிஜேபியின் மாநில தலைவர் தமிழிசை. ஆயிரம் யூகங்களை அடித்து நொறுக்கிவிட்டு தாறுமாறான வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தவர் கனிமொழி. 

என்னை நிரூபித்துவிட்டேன்!? இனி  கழகத்தின் டெல்லி முகமாகவும், தமிழகத்தில் கட்சியின் பெண் முகமாகவும் இருப்பேன்! என்று தன் அம்மா ராசாத்தி மற்றும் நெருங்கிய உறவுகள், நட்புக்களிடம் கெத்தாக பேசிவிட்டு ஃபிளைட் ஏறி போனார் கனிமொழி. ஆனால் அங்கு நடந்தது எல்லாமே தலைகீழாக இருந்தது. 

டெல்லியில் ஸ்டாலினின் மனசாட்சியாக இருப்பார் கனிமொழி! என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  வெயிட்டு கை டிஆர்.பாலுவுக்கு முழு  கொடுத்தார் ஸ்டாலின். பாலு ஒரு வெறித்தனமான ஸ்டாலின் பக்தனென்றே சொல்லலாம். எனவே எப்படி செக் வைக்கமுடியுமோ அப்படியெல்லாம் டெல்லியில் கனியின் வளர்ச்சியை முடக்கினார்.


 
டெல்லியில்தான் இந்த நிலை என்றால், சென்னை அதற்கும் மேல் வாட்டி வதைக்கிறது கனிமொழியை. தனது அப்பாவும், கழக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் முதலமாண்டு நினைவு நாள் நிகழ்வுகளுக்கு, சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. பெண் என்பதால் அவரை வரவேற்க தான் இருக்க வேண்டும்! எனும் எண்ணத்தில் விறுவிறுவென டெல்லியிலிருந்து கிளம்ப தயாராகி இருக்கிறார்  கனிமொழி. ஆனால், ‘அவசரமாக வரவேண்டாம். மம்தாவை வரவேற்கும் பொறுப்பு உதயநிதியிடம் கொடுக்கப்பட்டுவிட்டது. என்று தகவல் அவரது தலையில் இடியாய் வந்து விழுந்தது. பல்லைக் கடித்துக் கொண்டார். விழா நிகழ்வுகளிலும் முன்னுரிமை இல்லாமல் அடக்கி வைக்கப்பட்டார். 

இதனைத் தொடர்ந்து கருணாநிதியின் நினைவு தினத்தன்று அண்ணா சிலையிலிருந்து கிளம்பியது மெளன ஊர்வலம். அப்போது தன் அண்ணன் ஸ்டாலினுடனேயே நடந்து வந்தார் கனிமொழி. ஆனால் ஒரு கட்டத்தில் சுப்புலெட்சுமி ஜெகதீசன் அவரை பீட் செய்ய முயன்றிருக்கிறார். ஏற்கனவே கடுப்பில் இருந்த கனிமொழி, அப்போது எரிந்து விழுந்துவிட்டாராம்.  இதெல்லாம் அருகில் நடந்து கொண்டிருந்த ஸ்டாலினின் கண்களில் பட்டாலும் தன் தங்கைக்காக அவர் பெருசா அலட்டிக் கொள்ளவேயில்லை! என கூடவே நடந்து சென்றவர்கள் சொல்கிறார்கள்.  கனிமொழியை டம்மியாக்கப்படும் இந்த பிரச்சனையை எல்லாமே புரிந்தும், அதிரடியாய் எதையும் செய்ய இயலாதவராய் இருக்கிறாராம் ராசாத்தி.