* என் உழைப்பையும், அரசியலையும், சாதனைகளையும் பார்க்காமல் என் உருவத்தையும் நிறத்தையும் பார்த்து என்னை மட்டம் தட்டுவது என்ன நியாயம்? வெள்ளை நிற பெண்களென்றால் இப்படி விமர்சனம் செய்வார்களா?: தமிழிசை செளந்தர்ராஜன். (கட்சி, கொள்கையெல்லாம் தாண்டி தனிமனுஷியா உங்களை பெருமையா பார்க்குது மேடம் தமிழ்நாடு. தாமரை மலருதோ இல்லையோ, தமிழிசை உயர்தார்! தமிழிசை உயர்ந்தே தீருவார்!)

* ஊழலை ஒழிக்காத லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை மாநகராட்சியில் எதற்கு?: உயர்நீதிமன்றம். (செமத்தியா கேட்டீங்க எசமான், இதே மாதிரி எல்லா டிபார்ட்மெண்ட்டையும் டப்பா டான்ஸ் ஆடுற மாதிரி மரியாதை மிகு நீதிமன்றம் விமர்சிச்சு வெளுக்கணும் அப்படின்னு ஒரு பொது நல வழக்கு போடலாமுங்ளா?)

* தமிழகத்தில் நடக்கும் அரசு நிகழ்வுகளில் தமிழ்தாய் வாழ்த்தில் துவங்கி, தேசிய கீதத்தில் முடிவது மரபு. ஆனால் மதுரையில் பிரதமர் நிகழ்வில் இந்த இரண்டுமே இசைக்கப்படவில்லை: செய்தி. (என்னங்க கவனிக்குறீங்க நீங்க? அதான் கடந்த ஒரு மாசமா தம்பிதுரை வெச்சு வாசி வாசின்னு வாசிச்சுட்டு இருக்காரே? உங்க காதுல விழலையா?)

* தேர்தலுக்கான சில விட்டுக்கொடுத்தல்களை கொள்கை, நிலைப்பாடுகளாக பார்க்க தேவையில்லை. விட்டுக் கொடுத்தல்கள் தவறேயில்லை: திருமாவளவன். (க்கும், காம்ரேடுகள் கூட சேர்ந்து ம.ந.கூட்டணி அமைச்சு, ஜாக்கிங் போயி, வாக்கிங் போயி, டீ குடிச்சு பழகி இப்டில்லாம் பேச கத்துக்கிட்டீங்க தல! அவிய்ங்கதான் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவதை ‘ஒடுக்கப்பட்ட பாட்டாளிகள் விருப்பம்’ன்னு சொல்லி ஓவரா நியாயப்படுத்துவாங்க.)

* ஸ்டாலினின் அதிருப்தி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து, அவரின் சர்வாதிகார போக்குக்கு முடிவு கட்டுவதாக அழகிரி சவால்: செய்தி. (அட போங்க தல, உங்க தம்பி ‘இந்த ஆட்சி விரைவில் கவிழும்’ அப்படின்னு வருஷக்கணக்கா சொல்றா மாதிரிதான் நீங்களும் இப்படி பேசிட்டே இருக்கீங்க. எதுல ஒத்து போகுதோ இல்லையோ, இதுல உங்க ரெண்டு பேருக்கும் நல்லாவே ஒத்து போகுது.)