முன்னாள் அமைச்சர் பொன்முடியை வீட்டுக்கே சென்று சந்தித்த மு.க.அழகிரி..!

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை தொடர்ந்து பொன்முடியின் அமைச்சர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது.

MK Alagiri sudden meeting with former minister Ponmudi tvk

சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டணை பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடியை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சந்தித்துள்ளார். 

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை தொடர்ந்து பொன்முடியின் அமைச்சர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட போதும் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

MK Alagiri sudden meeting with former minister Ponmudi tvk

இந்நிலையில் நேற்று சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று பொன்முடி சந்தித்தார். அப்போது 3 ஆண்டுகள் சிறை தண்டனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;- பொன்முடிக்கு 30 நாட்கள் அவகாசம்... சரணடையாவிட்டால் நடவடிக்கை எடுங்கள்- விழுப்புரம் கோர்ட்டிற்கு பறந்த உத்தரவு

MK Alagiri sudden meeting with former minister Ponmudi tvk

இந்நிலையில் இன்றைய தினம் சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலணியில் உள்ள பொன்முடி வீட்டிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் மு.க.தமிழரசுஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios