திமுக முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி பாஜகவிற்கு வந்தால் நாங்கள் வரவேற்போம் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

திமுகவின் தென்மண்டல செயலாளராக இருந்த மு.க.அழகிரி 2014ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அக்கட்சியில் இருந்து நீக்க்படப்டார். அதன்பிறகு நேரடி அரசியலில் பங்கேற்காமல் இருந்து வந்தார். ஆனால், அவ்வப்போது அரசியல் பிரவேசம் குறித்து பேசி வருகிறார். இதனிடையே, தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக வரும் 20ம் தேதி மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும், தமிழகம் வர உள்துறை அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் தீயாய் பரவின.

இந்நிலையில், திருவண்ணாமலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்;- திமுக முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம். மு.க .அழகிரி உடன் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை எனவும் முருகன் விளக்கமளித்துள்ளார். முருகனின்  இந்த பதில் மு.க.அழகிரிக்கு விடுக்கப்படும் ரகசிய அழைப்பாகவே பார்க்கப்படுகிறது.