எடப்பாடி பழனிசாமி போல அமெரிக்காவில் போய் இறங்கியதும் கோர்ட் சூட்டில் ஓ.பிஎஸ் கலக்குவார் என எதிர்பார்த்தால் சிகாகோ நகரில் மைனஸ் -2  டிகிரியிலும் வேஷ்டி சட்டையில் போய் வரவேற்பை பெற்றுக் கொண்டார்.

 

அரசு முறை பயணமாக  10 நாட்கள் அமெரிக்கா சென்றுள்ள கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தை சிக்காக்கோ விமான நிலையத்தில்  ஏராளமானோர் திரண்டு வரவேற்றனர். 

ஓ.பி.எஸ் மகனும் எம்பியுமான ஓ.பிரவீந்திர நாத் கோட் சூட்டில் அசத்த, ஓ.பி.எஸின் மனைவி விஜயலட்சுமி கூட சுடிதாருக்கு மாறியிருக்க வேட்டி சட்டையிலே அதிக நேரம் வலம் வந்தார் ஓ.பி.எஸ். அங்கிருக்கும் அனைவரும் கோட், சூட்டில் வரவேற்க தமிழர்களின் அடையாளமான வேஷ்டி சட்டையிலேயே கலக்கினார் ஓ.பிஎஸ். உங்களது எளிமை மிகவும் வலிமையானது என அமெரிக்க தமிழ்சங்கத்தினர் ஓ.பி.எஸை பாராட்டி உள்ளனர். 

நாளை சிகாகோவின், அமெரிக்கன் மல்டி எத்னிக் கோயலிஷன்  நடத்தப்படும் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர்ஸ்-2019 விழாவில் சிறப்பு விருந்தினராக ஓ.பி.எஸ் கலந்துகொள்கிறார். இந்த விழாவில் ஓ.பி.எஸுக்கு சர்வதேச ரைசிங் ஸ்டார் விருது வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தேனி எம்.பி.யும், ஓ.பி.எஸ். மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத்தும் கலந்து கொள்கிறார்.