Ministers will not meet Sasikala - Jayakumar

சிறையில் இருந்து பரோலில் வெளிவரும் சசிகலாவை அமைச்சர்கள் சந்திக்க மாட்டார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவர் நடராஜனை பார்ப்பதற்காக பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா இன்று பரோலில் வருகிறார். சென்னை வரும்
சசிகலா, இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்க உள்ளதாக கூறப்படுகிறது.

233 நாட்களுக்குப் பிறகு சென்னை வரும் சசிகலா கணவரைப் பார்ப்பதற்காக, 15 நாட்கள் பரோல் கேட்டிருந்த நிலையில் சசிகலாவுக்கு 5 நாட்கள்
மட்டும் பெங்களூரு சிறை நிர்வாகம் அளித்துள்ளது.

18 நிபந்தனைகளின்பேரில் சசிகலாவுக்கு பரோல் வழங்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. பரோலில் வெளிவரும் சசிகலா, மருத்துவமனை மட்டும் வீட்டிற்கு மட்டுமே சென்றுவர அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அரசியல் ரீதியிலான நடவடிக்ககைகளில் ஈடுபட சசிகலாவுக்கு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், பரோலில் வரும் சசிகலாவை அமைச்சர்கள் சந்திக்க மாட்டார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் - செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய ஜெயக்குமார், சசிகலாவின் வருகையால் தமிழக அரசியலில் எந்த தாக்கமும் ஏற்படுத்தாது என்றார்.

பரோலில் வரும் சசிகலாவை எந்த அமைச்சர்களும் சந்திக்க மாட்டார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.