Asianet News TamilAsianet News Tamil

இந்தியை எதிர்க்கும் அமைச்சர்களே.. உங்கள் பிள்ளைகள் எத்தனை பேர் தமிழ்வழியில் படிக்கிறார்கள்.? வானிதி சீனிவாசன்

இந்தியை எதிர்க்கிறோம் தமிழை வாழ வைக்கிறோம் என்று கூறும் திமுக அமைச்சர்களின் வீட்டு பிள்ளைகள் எத்தனை பேர் தமிழ் மொழியில் படிக்கிறார்கள் என்ற பட்டியலை திமுக அரசு வெளியிட முடியுமா என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Ministers who oppose Hindi.. How many of your children are studying in Tamil medium? Vanithi Srinivasan Question
Author
First Published Oct 19, 2022, 11:40 AM IST

இந்தியை எதிர்க்கிறோம் தமிழை வாழ வைக்கிறோம் என்று கூறும் திமுக நிர்வாகிகள் வீட்டு பிள்ளைகள் எத்தனை பேர் தமிழ் மொழியில் படிக்கிறார்கள் என்ற பட்டியலை திமுக அரசு வெளியிட முடியுமா என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் இந்தித் திணிப்பு முயற்சியில் ஈடுபடுவதாக கூறி  திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ள நிலையில் வானதி சீனிவாசன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். 

Ministers who oppose Hindi.. How many of your children are studying in Tamil medium? Vanithi Srinivasan Question

இதையம் படியுங்கள்: இந்தி எதிர்ப்பாளர்களை இருட்டடிப்பு செய்தது தான் திமுகவின் சாதனை..! தமிழை கோட்டை விட்ட ஸ்டாலின்- அண்ணாமலை

அமித் ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் இந்தி திணிப்பு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகவலை அடுத்து  இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக இளைஞரணி சார்பில் இந்தித் திணிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எந்த இடத்திலும் மத்திய அரசின் இந்தித் திணிப்பு செய்யவில்லை என பாஜகவினர் கூறி வருகின்றனர்.

இதையம் படியுங்கள்: ஹிந்தி திணிப்பு.. போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்.. தூத்துக்குடியில் பரபரப்பு..

இந்நிலையில் பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் திமுக அரசை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கனவே மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு என தமிழக மக்கள் திமுக அரசு மீது கொந்தளிப்பில் உள்ளனர். இதை திசை திருப்புவதற்காக திமுக அரசு இந்தி என்ற நாடகத்தை கையில் எடுத்துள்ளது. பாஜக நாட்டிலுள்ள அனைத்து மொழிகளுக்கும் சம அதிகாரம் வழங்கி வருகிறது. நாட்டில் எந்த இடத்திலும் எந்த மாநிலத்திலும் இந்தி திணிக்கப்படவில்லை, அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த  மாநிலத்தின் தாய்மொழிகளில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதுதான் மத்தியரசின் கொள்கை.

Ministers who oppose Hindi.. How many of your children are studying in Tamil medium? Vanithi Srinivasan Question

இதுதான் தேசிய கல்வி கொள்கையும்கூட, இந்தியை எதிர்க்கிறோம் தமிழ் தான் எங்கள் உயிர் என பேசும் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் யாராவது தங்கள் பிள்ளைகளை தமிழ் வழிக்கல்வியில் படிக்க வைக்கின்றனரா என்பது குறித்து திமுக பட்டியல் வெளியிட தயாரா? திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் எத்தனை பள்ளிகளில் இந்தி பாடம் உள்ளது என்பதை வெள்ளை அறிக்கையாக திமுக தலைமை வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியில் மருத்துவம் படிப்பை துவங்க திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது, தமிழில் மருத்துவ படிப்பு வரும் போது அதை திமுக ஏற்குமா? எதிர்க்குமா? அதில் என்ன நிலைப்பாடு என்பதை முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு வானதி கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios