ministers reply to stalin about neet issue

நீட் தேர்வில் நிரந்தர தீர்வு வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு எனவும், இடைக்கால நிவாரணம் பெறும் எந்த முயற்சியும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை எனவும் தமிழக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மருத்து படிப்பிற்கான சீட்டுகளை நீட் என்ற தேர்வு மூலம் மூலம் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்தது.

இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் தமிழக எதிர்கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. ஆனால் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி மத்திய அரசு கட்டுப்பாடுகளுடன் தேர்வை நடத்தி முடித்தது.

இதையடுத்து வந்த தேர்வு முடிவுகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலானோர் தேர்ச்சி பெறவில்லை.

இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அமைச்சர்கள், மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமரை நேரில் சென்று வலியுறுத்தி வருகின்றனர்.

அதன்படி இன்றும் டெல்லியில் பிரதமரை சந்தித்து வலியுறுத்தினர். இதுகுறித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியதற்கு நீட் விவகாரத்தில் நிரந்தர முடிவு தான் வேண்டும் எனவும், தற்காலிக முடிவு தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர்கள தங்கமணி, சிவி சண்முகம், ஜெயக்குமார், அன்பழகன் ஆகியோர், நீட் தேர்வில் நிரந்தர தீர்வு வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு எனவும், இடைக்கால நிவாரணம் பெறும் எந்த முயற்சியும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தனர்.