Asianet News TamilAsianet News Tamil

முதல்வர் எடப்பாடியுடன் அமைச்சர்கள் அவசர ஆலோசனை - அடுத்தடுத்து திக் திக் நிமிடங்கள்!!

ministers meeting with CM edappadi palanisamy
ministers meeting with CM edappadi palanisamy
Author
First Published Jun 5, 2017, 4:22 PM IST


ஜெயக்குமார் தலையில் 17 அமைச்சர்கள் ஒன்றரை மணி நேர ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலா அணி ஒ.பி.எஸ் அணி என இரண்டாக பிரிந்தது. பின்னர், சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார்.

சிறைக்கு செல்லும் முன் எம்.எல்.ஏக்களை அழைத்து பேசி எடப்பாடியை முதல் நிலை வேட்பாளராகவும் தினகரனை துணை பொதுச்செயலாளராகவும்  தேர்வு செய்து விட்டு  சென்றார்.

தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை விவகாரத்தில் ஒ.பி.எஸ் தரப்பு குடைச்சல் கொடுக்கவே சின்னம் முடங்கியது.

இதையடுத்து முடங்கிய சின்னத்தை மீட்க தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றாக கூறி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர், எடப்பாடி தலைமயிலான அமைச்சரவை ஒ.பி.எஸ்சுடன் கூட்டு சேர்ந்து இரட்டை இலை சின்னத்தை மீட்க திட்டமிட்டது.

இந்நிலையில், தற்போது தினகரன் ஜாமில் வந்து கட்சியில் தொடர்ந்து செயலாற்றுவேன் என செய்தியாளர்களிடம் வாக்குமூலம் அளித்தார்.

இதற்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் 17  பேர் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினர். ஒன்றரை மணிநேர ஆலோசனைக்கு பிறகு தற்போது முதலமைச்சருடன் 19அமைச்சர்களும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், ஓ.எஸ் மணியன், உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே தினகரன் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios