மாநிலங்களில் சுற்றுபயணம் மேற்கொள்ளும்போது பூங்கொத்திற்கு பதிலாக கைக்குட்டைகளும் புத்தகங்களும் தருமாறு பிரதமர் மோடி கேட்டுகொண்டதற்கிணங்க இன்று மதுரை வந்த அவருக்கு புத்தகங்கள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டன.

கடந்த ஆண்டு ‛மான் கி பாத்' நிகழ்ச்சியில் பூங்கொத்துகளை தவிர்த்து கைக்குட்டைகளையும், புத்தகங்களையும் வழங்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இதனைதொடர்ந்து பிரதமர் மோடி மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்யும் போது பூங்கொத்து கொடுத்து வரவேற்க வேண்டாம் என உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தில், பிரதமர் மோடிக்கு பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்க வேண்டாம் எனவும், அதற்கு பதில் காதியால் ஆன கைக்குட்டைகள், புத்தகங்களை வழங்கலாம் எனவும் தெரிவித்திருந்தது.

மேலும் இதனை அனைத்து மாநிலங்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று முன்னாள் குடியரசுதலைவர் அப்துல்கலாம் நினைவு மண்டபத்தை திறந்து வைக்க தனி விமானம் மூலம் மதுரை வந்த பிரதமரை ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பு அளிக்கும்போது மோடிக்கு காதியால் ஆன கைக்குட்டைகள், மற்றும் புத்தகங்கள் வழங்கி வரவேற்றனர்.