கே.பி.முனுசாமியின் அதிரடி பேச்சை தொடர்ந்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வீட்டிற்கு தங்கமனி உள்ளிட்ட அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் சென்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவில் அடுத்தடுத்து குழப்பம் நிலவி வந்ததால் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஒதுக்கி வைக்க அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது.

எடப்பாடி அமைச்சரவையின் இத்தகைய செயலுக்கு ஒ.பி.எஸ் தரப்பு வரவேற்பு அளித்தது.

ஆனால் எடப்பாடி தரப்பு ஒ.பி.எஸ் நிர்பந்தத்தால் இந்த முடிவு எடுக்கவில்லை எனவும், ஒ.பி.எஸ் அணியுடன் இணைந்தாலும் எடப்படியே முதலமைச்சர் எனவும் கூறி வந்தனர்.

இதனால் ஒ.பி.எஸ் அணிக்கும் எடப்பாடி அணிக்கும் கருத்து வேறுபாடு நிலவியது.

ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டன்ர். இதனிடையே பல்வேறு தரப்பினரும் தினகரன் பல்வேறு வழக்குகளில் சிக்கி உள்ளதால் அவரை வழக்குகளில் இருந்து விடுவிப்பதற்காக சசிகலா நடத்தும் திட்டமே இது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதை கேள்வி பட்ட ஒ.பி.எஸ் தரப்பினர் இன்னும் உச்சாணி கொம்பில் ஏறி உட்காந்து கொண்டனர்.

சசிகலாவையும் தினகரனையும் முறைப்படி அறிவிப்பின் மூலம் கட்சின் பொறுப்பிலிருந்து விடுவிப்பதாக அறிவிக்க வேண்டும் எனவும் ஜெ. மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். 

இந்த கோரிக்கைகளை ஏற்றுகொண்டால் பேச்சுவார்த்தைக்கு வருவோம் இல்லையென்றால் மக்களை சந்தித்து பார்த்து கொள்கிறோம் என கூறிவிட்டனர் ஒ.பி.எஸ் தரப்பினர்.

மேலும் கே.பி.முனுசாமி பேசுகையில், தம்பிதுரையை எடப்பாடி அணியில் யாரும் மதிக்கவே இல்லை. அவரை அமைச்சர்களும் கண்டுகொள்ளவே இல்லை. அதனால் அவர் பேசுவதையெல்லாம் பொருட்படுத்த தேவையில்லை என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எடப்பாடி அணியை சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வீட்டிற்கு தங்கமனி உள்ளிட்ட அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் சென்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வீட்டற்கு முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் சுப்பிரமணியன், மாதவரம் மூர்த்தி ஆகியோர் வந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.