அணிகள் இணைவதற்கு தடையாக இருப்பவர்கள் அமைச்சர்கள் தான் காரணம் என நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரு அணியாக பிரிந்தது. அதில் சசிகலா அணி, ஒ.பி.எஸ் அணி என உருவாகியது. இதையடுத்து சசிகலா அணியில் வலிடத்துபவர்களின் பெயர்கள் மாறிக்கொண்டே செல்கிறது.

முதலில் சசிகலா இருந்தார். அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதும் டிடி.வி தினகரன் வந்தார். அவர் இரட்டை இலை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் சிறைக்கு சென்று விட்டார்.

இந்நிலையில், தற்போது எடப்படியிடம் ஆட்சியையும் கட்சியும் நிலை பெற்று கொண்டிருக்கிறது. ஆனால் ஒ.பி.எஸ் தரப்பில் அவர் மட்டுமே தலைவராக நிலைத்து நிற்கிறார்.

எடப்பாடி தரப்பில் அமைச்சர்கள் இருந்தாலும் பெரும்பாலான அமைச்சர்கள் சசிகலாவுக்கும் டிடிவி தினகரனுக்குமே ஆதரவாக செயல்படுகின்றனர்.

எடப்பாடி எப்படியாவது ஒ.பி.எஸ்சுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்று துடிப்புடன் உள்ளார்.

ஆனால் அவர்கள் தரப்பில் அமைச்சர்கள் எதாவது கூறி ஒ.பி.எஸ் அணி இணைவதற்கு முட்டுகட்டை போட்டு வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் பெரும்பான்மையை காண்பிக்க ஒ.பி.எஸ் சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி திண்டுக்கல்லில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய ஒ.பி.எஸ் ஆதரவாளர் நத்தம் விஸ்வநாதன் இரு அணிகளும் இணைய தடையாய் இருப்பவர்கள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசனும், ஜெயக்குமாரும் தான் என தெரிவித்தார்.

மேலும் முதலமைச்சர் ஆக ஆசைப்பட்டவர்கள் எல்லாம் சிறையில் இருக்கிறார்கள் எனவும் ஜெயலலிதாவின் வாரிசான ஒ.பி.எஸ் தலைமையில் ஆட்சி அமைப்போம் எனவும் தெரிவித்தார். 

எது எப்படியோ புலி வருது புலி வருது என்பது தான் இவர்கள் கதை...