தண்ணீர் தட்டுப்பாட்டால் சென்னையில் ஓட்டல்கள் மூடப்படுகிறது என்பது தவறான தகவல் என்று அமைச்சர் வேலுமணியை சந்தித்த பின்னர் ஓட்டல் உரிமையாளர்கள் பேட்டியளித்து உள்ளனர்.

தமிழகம் முழுவதுமே பரவலாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிலும் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு மிகவும் கடுமையாக உள்ளது. இதன் காரணமாக பல்வேறு உணவகங்களில் மதிய உணவு நிறுத்தப்பட்டுள்ளது. நிறைய மேன்ஷன்கள் மூடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் சென்னையில் ஓட்டல்கள் மூடப்படுகிறது என்பது தவறான தகவல் என்று அமைச்சர் வேலுமணியை சந்தித்த பின்னர் ஓட்டல் உரிமையாளர்கள் பேட்டியளித்து உள்ளனர். சென்னை எம்ஆர்சி நகரில் செவ்வாய் கிழமை ஓட்டல் உரிமையாளர்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது எப்படி? என்பது குறித்து அமைச்சர் வேலுமணி ஆலோசனை நடத்தினார்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளார்களிடம் பேசிய ஓட்டல் உரிமையாளர்கள் கூறியதாவது, ’’சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் ஓட்டல்கள் மூடப்படுகிறது என்பது தவறான தகவல். தனியார் குடிநீர் லாரிகள் மூலமாக தண்ணீர் பெற்றுக் கொள்கிறோம். தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. ஆனால் விலை சற்று கூடுதலாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.