Asianet News TamilAsianet News Tamil

உதயநிதி சனாதனத்தை ஒழிப்பது இருக்கட்டும் முதலில் கொசுவை ஒழியுங்கள் - கிருஷ்ணசாமி விமர்சனம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிப்பது இருக்கட்டும், முதலில் கொசுவை ஒழிக்கட்டும் என திருச்சி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

minister udhayanidhi stalin should control mosquitoes in tamil nadu says krishnasamy in trichy vel
Author
First Published Nov 8, 2023, 5:25 PM IST

புதிய தமிழகம் கட்சியின் திருச்சி, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் மற்றும் கிளை நிர்வாகிகள் பதவியேற்பு,  பாராட்டு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண அரங்கில் கட்சியின் மாநில தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது.

இதில்  கட்சியின் வாக்குச்சாவடி முகவர் பயிற்சி அளிக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்யப்பட்டு  பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் திருச்சி உட்பட 6 மாவட்ட நிர்வாகிகள் 300க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புதிய தமிழகம் கட்சியின் மாநில தலைவர் கிருஷ்ணசாமி, தனிமனித வருமானத்தை தற்போது ஒப்பிட முடியாது. எத்தனை பேருக்கு தனி மனித வருமானம் வந்துள்ளது? இன்று வருமானம் கூடியிருக்கிறது.

பிறந்த நாள் கொண்டாடிய 2 மணி நேரத்தில் குடும்பத்தோடு தற்கொலை; மதுரையை உலுக்கிய பரபரப்பு சம்பசம்

1960ல் ஒரு பவுன் தங்கத்தின் விலை 100 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது அதன் விலை 47 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சம்பளம் கூடவில்லை. இன்று நூற்றுக்கு 60 பேரின் வாழ்க்கை தரம் சரி இல்லை. தமிழகத்தில் மக்களின் வருமானம் கூடினால் கூட வாழ்க்கை தரம் உயரவில்லை. இன்று அதிகமான பேர் வறுமையில் உள்ளனர். 100 நாள் வேலை,  இலவச அரிசி இரண்டையும் எடுத்து விட்டால் இன்று பல குடும்பங்கள் பட்டினியில் கிடக்கும் இதுதான் உண்மை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தற்பொழுது தமிழகம்,  பாண்டிச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிக்கான பணியில் ஈடுபட்டு வருகிறோம். தேர்தல் வரும் போது அணிகள் அமைவதை பொறுத்து எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்வோம். பாஜக, அதிமுக பிரிந்து விட்டதாக முடிவாக கூறப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு அதற்குள் ஏதும் சொல்ல முடியாது. அதற்கான எந்த க்ளியர் பிக்சர் கிடையாது. தை பிறந்தால் வழி பிறக்கும். பொங்கலுக்கு பின்னர் ஜனவரி பிறந்த பிறகு தான் அரசியல் சூழ்நிலைகள் தெளிவாகும். இப்போது தெளிவாகி விட்டதாக கருத முடியாது. எந்த கூட்டணியில் யார் இருப்பார்கள் என்று தெரியாது.

தமிழகத்தில் திமுக, அதிமுக தான் பெரிய கட்சி என்று நீங்களாக நினைத்துக் கொள்கிறீர்கள். தமிழகத்தில் புதிய, புதிய சக்தி எல்லாம் உருவாகி வருகிறது. புதிய தமிழகம் கட்சி தமிழகத்தில் முக்கியமான அரசியல் சக்தியாக விளங்குகிறது. தென் தமிழகத்தில் மூன்றாவது பெரிய சக்தியாக புதிய தமிழகம் விளங்குகிறது. 25நாடாளுமன்ற தொகுதியில் செல்வாக்கோடு இருக்கிறோம். எங்கள் தலைமையில் கூட்டணி உருவாகலாம். 

நான் தோசை சுட வரவில்லை என கூறிய அண்ணாமலை திருச்சியில் அண்ணாமலை புரோட்டா சுடும் காட்சி

உதயநிதி சனாதானத்தை அப்புறம் ஒழிக்கட்டும், முதலாவது கொசுவை ஒழிக்கட்டும். ஒழிக்க முடியாததை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஊர் ஊராக சென்று கையெழுத்து வாங்குவது எதுவும் நடக்காது. திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் சிலை எடுக்கப்படும் என அண்ணாமலை கூறியதற்கு தமிழகத்தில் சாலையோரம் இருக்கிற அனைத்து சிலைகளும் எடுக்கப்பட வேண்டும்.

தனிப்பட்ட முறையில் பெரியார் சிலையை மட்டும் அகற்றுவது என்பது எதிர் விளைவுகளை உருவாக்கலாம். சிலைகளை அகற்ற வேண்டும் என்றால் எல்லா சிலைகளும் அகற்றப்பட வேண்டும். மக்கள் நம்பிக்கை அடிப்படையில் நகைகளை வெளியே போடுகிறார்கள். நடைபெறும் கொள்ளைகளை தடுப்பதற்கு, அதனை மீட்டு பயன்படக்கூடிய வகையில் ஒரு வலுவான முறையை ஏற்படுத்த வேண்டும். கோவில் சொத்துக்களை பராமரிப்பதற்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios