தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்தார் மறைந்த செல்வி ஜெயலலிதா. அவரது பிறந்தநாள் விழா வருகிற 24 ம் தேதி அதிமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் அவரது சமாதியில் நினைவிடம் திறக்கப்பட இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஜெயலலிதாவின் பிறந்தநாளை அனைத்து மாவட்டங்களிலும் கோலாகலமாக கொண்டாட அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் மதுரை மாவட்டத்தில் ஜெயலலிதாவின் பிறந்த விழா கொண்டாட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் உசிலம்பட்டியில் இருக்கும் இருக்கும் ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினர். மதுரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்றவை குறித்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர் திமுகவையும், தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தையும் கடுமையாக விமர்சித்தார்.

திமுக தொடர்ந்த பொய் வழக்குகளால் தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்தார் என்றும் தற்போது அதே திமுகவுடன் கூட்டணி அமைத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்பட்டு வருவதாக தான் ஆணித்தரமாக கூற முடியும் என அமைச்சர் உதயகுமார் பேசியிருக்கிறார். முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜெயலலிதா சிறைக்கு சென்றிருந்தார். பின் மேல்முறையீட்டு வழக்கில் 2015ம் ஆண்டு அவர் விடுதலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

டாஸ்மாக் விடுமுறை தினத்தில் சரக்கு விற்பனை அமோகம்..! முண்டியடித்து வாங்கிய குடிமகன்கள்..!