minister udayakumar blether

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் தந்தை உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சனிக்கிழமை மாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

எச்.ராஜாவின் தந்தை மரணத்துக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, எச்.ராஜாவின் தந்தையின் மறைவுக்கு ராஜாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் பழனிசாமி தனது இரங்கலையும் வாழ்த்தையும் தெரிவித்ததாக அமைச்சர் உதயகுமார் உளறினார். இறந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்ததாக உளறிய உதயகுமார் கடுமையான கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளார். நெட்டிசன்களும் தங்கள் பங்குக்கு அமைச்சரை கலாய்த்து வருகின்றனர்.

ஏற்கனவே அமைச்சர்கள் மாறி மாறி பேசுவதால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இந்நிலையில், அமைச்சராக இருப்பவர், சுயநினைவுடன் கூடவா பேசாமாட்டார்? இவரெல்லாம் அமைச்சரா? என்ற கேள்விகளை மக்கள் எழுப்புகின்றனர்.