தனியாருக்கு தாரை வார்ப்பது பற்றி எல்லாம் பாஜக பேசுவது வேடிக்கையாக உள்ளது.. அமைச்சர் தங்கம் தென்னரசு..!

காவிரி டெல்டா மாவட்டங்களில் மூன்று இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் ஏலம் விட்ட நிலையில் இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் திமுக, காங்கிரஸ், அதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

Minister thangam thennarasu responded to Vanathi Srinivasan

தனியாருக்கு தாரை வார்ப்பது பற்றி எல்லாம் பாஜக பேரவையில் பேசுவது வேடிக்கையாக உள்ளது என சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். 

காவிரி டெல்டா மாவட்டங்களில் மூன்று இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் ஏலம் விட்ட நிலையில் இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் திமுக, காங்கிரஸ், அதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதையும் படிங்க;- நானும் டெல்டா காரன் தான்! ஒருபோதும் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம்-சட்டப்பேரவையில் ஸ்டாலின் உறுதி

Minister thangam thennarasu responded to Vanathi Srinivasan

பின்னர் இதற்கு பதில் அளித்து பேசிய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு;- கடந்த அதிமுக ஆட்சியில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டமாக கொண்டு வந்த போது அதில் என்னென்ன விடுபட்டன என்பது குறித்து அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தான் எடுத்துக் கூறியதாகவும் இதனை அதிமுக மறைக்க முடியாது. எனினும் இந்த விவகாரத்தை தான் அரசியலாக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். நிலக்கரி சுரங்க திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். நிலக்கரி சுரங்கம் போன்ற திட்டங்களை எந்தக் காலத்திலும், எந்த சூழ்நிலையிலும் டெல்டா பகுதியில் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது, அனுமதிக்காது. 

இதையும் படிங்க;- இதை மட்டும் ஸ்டாலின் செய்தால் வீடு தேடி சென்று பாராட்ட தயாராக இருக்கிறேன்.. ஒரே போடு போட்ட வானதி சீனிவாசன்.!

Minister thangam thennarasu responded to Vanathi Srinivasan

தொடர்ந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானிதி சீனிவாசன்;- திமுக ஆட்சியில் தனியாருக்கு திட்டங்கள் கொடுக்கப்பட்டதை  தெரிவித்த அவர் தனியாருக்கு திட்டங்களை கொடுப்பது குறித்து பாஜக பாடம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் விரல் நீட்டி ஒருவரை பேசும்போது மூன்று விரல்களும் உங்களை காட்டுகிறது என்பதை மறந்து விட வேண்டாம் எனவும் தனியாருக்கு திட்டங்களை தாரை பார்ப்பது யார் என பாஜகவை மறைமுகமாக சாடினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios