செந்தில் பாலாஜியை தொடர்ந்து அவரது தம்பிக்கு ஸ்கெட்ச் போடும் அமலாக்கத்துறை.. நழுவும் அசோக்குமார்..!
அமலாக்கத்துறை சார்பில் சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் இல்லம், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அசோக்குமார் தங்கியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு, கரூரில் அசோக்குமாரின் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடந்தது.
அமலாக்கத்துறை சார்பில் 2வது முறையாக சம்மன் அனுப்பிய நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் விசாரணைக்கு இன்றும் ஆஜராகவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மே மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர், அமலாக்கத்துறை சார்பில் சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் இல்லம், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அசோக்குமார் தங்கியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு, கரூரில் அசோக்குமாரின் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடந்தது.
இதையும் படிங்க;- இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதில் சிக்கல்.. என்ன காரணம் தெரியுமா?
இந்த சோதனைக்கு பிறகு அதிகாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து முதலில் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது காவேரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பணமோசடி தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் அசோக் குமார் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு 2வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதுமட்டுமின்றி, வழக்கு தொடர்பான ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க;- செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க முடியல! கோர்ட்டில் புலம்பிய அமலாக்கத்துறை! அடுத்து என்ன நடக்கும்?
இந்நிலையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் 2வது முறையாக விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதுதொடர்பாக அசோக்குமார் தரப்பில்;- அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை தயார் படுத்தவும். இது சட்ட ரீதியான நகர்வு இருப்பதால் இந்த தேதியில் ஆஜராக முடியாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.