Annamalai Vs Senthil balaji : மற்ற மாவட்டங்களை காட்டிலும் கோவை மாவட்டம் வளர்ச்சி பெற்ற மாவட்டமாக மாறும். வரலாற்றிலேயே முதன்முறையாக முதலமைச்சரே அமர்ந்து தொழில் முனைவோரின் கோரிக்கைகளை கேட்டார். 

இன்று கோவை மாவட்டம், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வீரியம்பாளையத்தில் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் நகர்நல மையம் கட்டும் பணிக்கு மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பூமிபூஜை செய்து தொடக்கி வைத்தார்.பிறகு ஆர்.எஸ் புரம் பகுதியில் உழவர் சந்தை முன்பு நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் பராமரிப்பு கோட்டம் சாலையை அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணியை 2 கோடியே 21 லட்சம் மதிப்பில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார். 

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, ‘கோவை மாநகராட்சியில் 63 நகர் நல மையங்கள் பணிகள் நடைபெறுகிறது. இது கோவை மாநகராட்சி வரலாற்றில் முதன் முறையாக உள்ளது. முதல்வர் கோவை மாவட்டம் வளர்ச்சி அடைய இந்த சிறப்புத் திட்டத்தை வழங்கியுள்ளார். கோவை மாநகராட்சியில் பல்வேறு சாலைகள் பழுதடைந்துள்ளது. ஏற்கனவே 198 கோடிக்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று ஒரு நாளில் மட்டும் 113 கோடியே 27 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் நகர்நல கட்டிட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க : "திராவிட மாடல் ஆட்சியில் 1 ஆண்டு கூட முடியல.. அதுக்குள்ள நாக்கு தள்ளுது.!" தெறிக்கவிட்ட அண்ணாமலை"

கோவையில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என முதல்வர் கட்டளையிட்டுள்ளார். தொழில் துறையின் தலைநகராக கோவை உள்ளது. இதன் வளர்ச்சிக்காக நிதிகளை தந்துள்ளார். கோவை விமான நிலைய விரிவாக்கத்தை பொருத்தவரை 1132 கோடி ரூபாய் நிதிகளை முதல்வர் வழங்கியுள்ளார். விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் எடுக்கும் பணிகள் இரண்டு மூன்று மாதங்களில் நிறைவடையும். மற்ற மாவட்டங்களை காட்டிலும் கோவை மாவட்டம் வளர்ச்சி பெற்ற மாவட்டமாக மாறும். வரலாற்றிலேயே முதன்முறையாக முதலமைச்சரே அமர்ந்து தொழில் முனைவோரின் கோரிக்கைகளை கேட்டார். அண்ணாமலை அரைவேக்காட்டு தனமாக கேள்வி கேட்டு வருகிறார்’ என்று கூறினார்.

இதையும் படிங்க : G Square Case: ஜி ஸ்கொயர் வழக்கு அதிரடி மாற்றம்..விகடன்,சவுக்கு சங்கர்,மாரிதாஸ் விடுவிப்பு !

இதையும் படிங்க : 10 ஆண்டுகளாக பாலியல் தொல்லை..6 முறை கருக்கலைப்பு..லீக் ஆன வீடியோ - அதிரடி திருப்பம் !