சட்டமன்ற தேர்தலின் போது அரவங்குறிச்சி மக்களுக்கு வாக்களிக்க ஆயிரம் ரூபாய் அண்ணாமலை கொடுத்ததாகவும் அந்த பணம் எங்கிருந்து வந்தது என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி

திமுக தலைமையிலான ஆட்சி பதவியேற்று ஒரு வருடங்கள் நிறைவடைந்த நிலையில், திமுக அரசு மீது பாஜக தொடர் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறது. மின் வாரியத்தில் டெண்டர் முறைகேடு, துபாய் பயணத்தில் முதலீட்டில் மோசடி, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து திட்டத்தில் முறைகேடு, ஜி.ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திற்கு தமிழக அரசு உதவி என பல்வேறு குற்றச்சாட்டக்களை அண்ணாமலை நாள்தோறும் கூறி வருகிறார்.நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, 3 வருடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும், அடுத்த ஆட்சியில் முதல் நாள் முதல் கைது அமைச்சர் செந்தில் பாலாஜி தான் என கூறியிருந்தார். இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு மாறும்போது முதல் நாள் முதல் கைது செந்தில்பாலாஜி என அண்ணாமலை கூறியதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, சில பேர் வேலை இல்லாமல் இருக்கின்றனர் எனவும் எனக்கு நிறைய வேலை இருக்கிறது என தெரிவித்தார். வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு நான் பதில் சொல்ல அவசியமில்லை எனவும் தெரிவித்தார். 

அண்ணாமலைக்கு பணம் எங்கிருந்து வந்தது

மேலும் கறந்த பால் மடி புகாது எனவும் தெரிவித்தார். அண்ணாமலையின் கனவு ஒருநாளும் பலிக்காது, இவ்வளவு பேசுபவர்கள் ஏன் அரவக்குறிச்சியில் மண்ணை கவ்வினார், ஏன் மக்கள் அவரை விரட்டியடித்தார்கள் என கேட்ட செந்தில் பாலாஜி, நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் இப்போது கூட எடுக்கலாமே? நாங்கள் வேண்டாம் என்றா கூறுகிறோம் என தெரிவித்தார். .தொடர்ந்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, அரவகுறிச்சி சட்டமன்ற தொகுதியில்அண்ணாமலை வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தாறே எங்கிருந்து வந்தது? காவல்துறையில் சம்பளம் வாங்கி சம்பளத்தை சேர்த்து வைத்து, அல்லது ஆடு மாடு மேய்த்து சேர்த்து வைத்தா வாக்களார்களுக்கு பணம் கொடுத்தார் என கேள்வி எழுப்பியதோடு எந்த காலத்திலும் அவர்கள் நினைப்பது நடக்காது,நடவடிக்கை எடுக்கலாம் என்றால் எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம் என தெரிவித்தவர், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நேர்மையான நிர்வாகம் வெளிப்படையான நிர்வாகம் எனத் தெரிவித்தார்.