Asianet News TamilAsianet News Tamil

LKG பசங்களுக்கு கூட இவர்கள் தான் பாடம் எடுக்க வேண்டும்... அமைச்சர் செங்கோட்டையனின் அடுத்த அதிரடி...!

பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் பாடம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

Minister Sengottaiyan School Students...Biometric attendance system
Author
Tamil Nadu, First Published Nov 14, 2018, 12:54 PM IST

பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் பாடம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

 Minister Sengottaiyan School Students...Biometric attendance system

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- உள்ளாட்சித்துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில் பெயிண்டிங் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவை கண்காணிக்க பயோமெட்ரிக் முறை 50 பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த வருடம் இறுதிக்குள் 1000 அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை செயல்படுத்தப்படும் என்றார். Minister Sengottaiyan School Students...Biometric attendance system

அதேபோல அரசு பள்ளி மாணவர்கள்  1.5 லட்சம் பேருக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். நடுநிலைப்பள்ளிகளில் தொடங்கப்பட உள்ள எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு யூ டியூப் மூலம் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. Minister Sengottaiyan School Students...Biometric attendance system

சென்னை, காஞ்சிபுரம் கோவை போன்ற இடங்களில் கேபிள் மூலம் 300 பள்ளிகளுக்கு இலவச இன்டர்நெட் வசதி செய்து கொடுக்கப்படும். கேபிள் மூலம் ஸ்மார்ட் வகுப்புகளை நடத்த நடவடிக்கை  எடுக்கப்படும் என செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளி கல்வி துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு, ஒவ்வொரு அடியும் மிக கவனமாக எடுத்து வைக்கிறார். அந்த வகையில் கல்வி துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios