minister sengottaiyan photo viral in social medias
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சூட்-கோட் அணிந்துகொண்டு ஸ்டைலாக போஸ் கொடுத்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
தமிழக அரசியல் கட்சியினர் அனைவரும் கட்சியின் கரை கொண்ட வெள்ளை வேட்டி, சட்டை அணிவதே வழக்கம். அதற்கு, திமுக, அதிமுக என எந்த கட்சியினரும் விதிவிலக்கல்ல.
அதேபோலத்தான், அமைச்சர் செங்கோட்டையனும். எப்போதுமே அதிமுக கரை கொண்ட வெள்ளை வேட்டி, சட்டைதான் அணிவார். தற்போது பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன், லண்டனில் நடந்துவரும் சர்வதேச கல்வி மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்.

இதற்காக அமைச்சர் செங்கோட்டையனும் பள்ளி கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவும் லண்டன் சென்றுள்ளனர். இங்கிலாந்தின் குளிரான தட்பவெப்பநிலை காரணமாக அந்நாட்டினர் டைட்டாக சூட்-கோட் தான் அணிவர். அதுவே அந்நாட்டினரின் கலாச்சாரமும் கூட.
இந்நிலையில், எப்போதுமே வெள்ளை வேட்டி, சட்டையில் காட்சியளிக்கும் அமைச்சர் செங்கோட்டையன், லண்டனில் சூட்-கோட் அணிந்து ஸ்டைலாக அமர்ந்து ஒரு போட்டோ எடுத்துள்ளார். அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
