மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் 2 மதிப்பெண்கள் அளிக்கும் முறை வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் 2 மதிப்பெண்கள் அளிக்கும் முறை வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும். இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் பள்ளி கல்வித்துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்வதாக பெருமையுடன் தெரிவித்தார். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
பள்ளி கல்வித்துறையில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றிய கேள்விக்கு கருத்து சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்தார். யார் தவறு செய்தாலும் அரசு நடவடிக்கை எடுக்கும். ஆசிரியர் பயிற்சி தகுதி தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும், புதிய பாடத்திட்டத்தில் என்னென்ன பாடங்கள் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
மேலும் இந்தியாவில் முதல்முறையாக பள்ளிக்கல்வித்துறை வாயிலான மாணவர்களை மேலைநாடுகளுக்கு அனுப்புவதற்கான பணிகளை 3 கோடி ரூபாய் செலவில் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எடப்பாடி அமைச்சரவையில் பொறுப்பேற்றதிலிருந்து அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறையில் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 31, 2019, 4:35 PM IST