நடப்பாண்டு படஜெட் பற்றி கருத்து கூறுவதற்கு முன்னால் அதையெல்லாம் படித்து பார்க்க வேண்டும்.. படிக்காமலே இடை இடையே கருத்து சொல்லி விட்டு திடீரென காணாமல் போய் விடுவார் எங்கே என்று பார்த்தால் சினிமாவில் நடித்துக்கொண்டிருப்பார் என்று நடிகர் கமல்ஹாசனுக்கு கமெண்ட் அடித்திருக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜீ.


 நம்ம மதுரை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.” நேற்றைய தினம் மத்திய பட்ஜெட்டில் சிறப்பான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன். வுpவசாயி ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்ககூடிய வகையில் அந்த பட்ஜெட் அமைந்துள்ளது. எடுத்தவுடனேயே பட்ஜெட் பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் குறை கூறுகிறார். இனிமேல்தான் பட்ஜெட் பற்றி ஒவ்வொன்றையும் விரிவாக விளக்கமாக தெரியும். ஸ்டாலின் எப்போதுமே அவசரப்பட்டு பேசக்கூடியவர். எதையுமே சிந்துத்து பேசக்கூடியவர் இல்லை.அவரிடம் இருந்து என்ன வந்திருக்கிறதோ அந்த கருத்து வந்திருக்கிறது..


பட்ஜெட் குறித்து நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துவிட்டு போய்விடுவார். இடையில் வந்து குரல் கொடுப்பார். இதையே வாடிக்கையாக கொண்டுள்ளவர் தான் கமல்ஹாசன். நடிகர் என்ற பப்ளிசிட்டிக்காக கருத்து  சொல்கின்றனர். பட்ஜெட்டை படித்து பார்த்து கமல் கருத்து சொல்ல வேண்டும். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் குறித்து விவாதம்  நடக்கும் போது திமுக எம்பிக்கள்  கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து பேச வேண்டும் என தெரிவித்தார்.

T Balamurukan