இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விருத்ததசலம் அதிமுக எம்எல்ஏ, ஜெயலலிதா தயவால், எம்.எல்.ஏ.,வான நான், அ.தி.மு.க., அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கிறேன் என தெரிவித்தார்.

ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், சபாநாயகர் தனபாலும் அதை மறந்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வான என்னை தகுதி நீக்கம் செய்ய முயற்சி செய்தனர். தினகரன் கட்சி துவங்கிய பின், அவருடன் நான் தொடர்பில் இல்லை. சசிகலாவின் ஆதரவாளராக உள்ளேன் என அதிரடியாக அவர் தெரிவித்தார்.

அதிமுகவின் இரட்டை தலைமையில் எனக்கு உடன்பாடில்லை.'சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து, ஓட்டளிக்க வேண்டும்' என, அதிமுக  கொறடா கடிதம் அனுப்பியுள்ளார். கொறடா உத்தரவை மதித்து, கடமையாற்றுவேன் என கலைச்செல்வன் உறுதி அளித்துள்ளார்.

அமைச்சரவையில், பல ஆண்டுகளாக உள்ள சம்பத், மூன்று ஆண்டுகளாக, தொழில் துறை அமைச்சராக உள்ளார்.மாவட்டத்திற்கு என்ன செய்தார்? ஹூண்டாய் கம்பெனியின் மற்றொரு நிறுவனமான, 'கியா'விடம் அமைச்சர் சம்பத்தும், அவரது மகனும், 17 சதவீதம் கமிஷன் கேட்டதால், அந்த தொழிற்சாலை, ஆந்திர மாநிலம் சென்று விட்டது என கடுமையாக குற்றம்சாட்டினார்.

இந்நிறுவனம், தமிழகத்தில் அமைந்திருந்தால், 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும் என்றும் கலைச் செல்வன் தெரிவித்தார்..