திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் ரூ.20 சிஸ்டம் செல்லுபடியாகாது என்றும், எதிரிகள் என்று வந்துவிட்டால் 
அவர்களை எதிர்க்க அதிமுக வியூகம் வகுக்கும் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக, அமமுக கட்சிகள் தயாராக 
உள்ளதாக கூறி வருகிறது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவினர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் 
வெற்றி பெறுவோம் என்று டிடிவி தினகரன் கூறி வருகிறார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும், சந்திக்க தயாராக உள்ளோம் என்றும், இந்த இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் 
வித்தியாசத்தில் வெற் பெறுவோம் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் ரூ.20 சிஸ்டம் செல்லுபடியாகாது என்றும் எதிரிகள் என்று வந்து விட்டால் 
அவர்களை எதிர்க்க அதிமுக வியூகம் வகுக்ம் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், டிடிவி தினகரனை வில்லன் என்று கூறியதற்கு டிடிவி தினகரன் 
ஆர்.பி.உதயகுமர் ஒரு காமெடி நடிகர் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.