இந்திய குடிமகனான ஒருவர் எந்த மொழி பேசினாலும், எந்த மதத்தை பின்பற்றினாலும், எந்த வழிபாட்டு முறையில் ஈடுபட்டாலும், இந்து மதம் மீது நம்பிக்கை இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அவர் ஒரு இந்துவாக தான் இருப்பார். 

ஆர்எஸ்எஸ்.,ஐ பொறுத்தவரை 130 கோடி இந்திய மக்களும் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள். அனைவரும் அவரவராக இருக்க வேண்டும், ஒவ்வொருவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் கருத்து என்று அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகாவத் ஹைதராபாத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசியிருந்தார்.

இதற்கு எதிர்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ருந்தனர். அதே நேரத்தில் அவரது கருத்துக்கு ஆதரவும் எழுந்தது. 
இந்நிலையில்  மத்திய அமைச்சரும், மாநிலங்களவை  எம்பி.,யுமான ராம்தாஸ் அத்வாலே ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,  இந்தியர்கள் அனைவரும் இந்துக்கள் என்று சொல்வது சரியல்ல என குற்றம்சாட்டினார்.

எல்லோரும் நம் நாட்டில் புத்தர்களாக இருந்த ஒரு காலம் இருந்தது. தற்போது, நம் நாட்டில் மக்கள் புத்தர்கள், சீக்கியர்கள் , இந்து, கிறிஸ்தவர், பார்சி, சமண, லிங்காயத் நம்பிக்கைகள் மற்றும் பல்வேறு சமூகங்கள் இங்கு வாழ்கின்றன. எனவே அனைவரும் இந்துக்கள் என்பது சரியல்ல என்று மோகன் பகாவத்துக்கு எதிராக பேசியுள்ளார்