சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு 5 மாவட்ட விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் – சென்னை 8 வழிச்சாலையை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம் வகுக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக 10 ஆயிரம் கோடி செலவிட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதை எதிர்த்து 5 மாவட்ட விசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தர். இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. அதில் தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து, அரசு கைப்பற்றிய நிலங்களை மீண்டும் உடைமையாளா்களிடமே வழங்கவேண்டும் என நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது. 

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 8 வழிச்சாலை திட்டத்தில் நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவு கிடையாது. சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றார். 

மேலும் எடப்பாடி விவசாயி அல்ல விஷ வாயு என ஸ்டாலின் கூறியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு முதல்வர் எடப்பாடியை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் டெட் பாடியாக இருப்பதாக அவர் பதிலளித்தார். ஸ்டாலின் சட்டமன்றத்திலும், வெளியிலும் எழுதிக் கொடுத்த பேப்ரை பார்த்து தான் படிப்பார் கருணாநிதியிடம் இருந்த திறமை கடுகளவுக்கூட ஸ்டாலினிடம் இல்லை என விமர்சித்தார்.