பிரபல தமிழ் செய்தி தொலைக்காட்சிக்கு மே 13-ம் தேதி பேட்டியளித்திருந்த தமிழக பால்வளத்துறை அமைச்சரும், விருதுநகர் அதிமுக மாவட்ட செயலாளருமான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விரிவான பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் கமலின் இந்து தீவிரவாதி பேச்சு குறித்த கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த ராஜேந்திரபாலாஜி ரொம்பவே கொதித்துபோய்விட்டார். 

முகம் சிவந்து ஆவேசத்தோடு நிரூபரிடம் பேசிய அமைச்சர் கமலுக்கு உடம்பு எல்லாம் திமிரு என ஓப்பனாக பேசினார். சினிமாவில் வசனம் பேசியவது போல இல்ல நிஜவாழ்க்கை. உன்னோடைய வேலையை சினிமாவில் வைத்துக்கொள். நிஜத்தில் அமைதியாக இருப்பவர்களை அமைதியாக வாழவிடு என ஆவேசமாக தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தீவிரவாதிகளை தீவிரவாதிகளாக பார்க்க வேண்டும் அவர்கள் இந்துவா, முஸ்லிமா, கிறிஸ்துவர்களா என பார்க்கக்கூடாது என்றார். உடம்பு நிறைய திமிரோடு உலா வரும் கமல்ஹாசன் இதுபோன்று இனி பேசக்கூடாது. இந்து மதத்தை பற்றி எதுவேண்டுமானாலும் பேசினால் யாரும் கேட்பதற்கு ஆளில்லை என நினைத்துவிட்டாரா கமல்ஹாசன் என நேரடியாக போட்டு தாக்கி பேசிய பேட்டியளித்தார். கமல் இந்து அமைப்புகள் மோதல் என்பதை விட ராஜேந்திர பாலாஜி கமல் மோதல் என்பது தற்போது ஐலைட்டாக ஆகியுள்ளது.

 

ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை இவர் மைக்கில் பேசிவாரா? என அதிமுக தொண்டர்களும் விருதுநகர் மாவட்ட மக்களும் நினைத்திருந்த நிலையில் கடந்த சில மாதங்களாவே ராஜேந்திர பாலாஜி ரைமிங்கோடு செமபோடு போட்டு வருவது அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.