Asianet News TamilAsianet News Tamil

விதைச்சது இந்தியர் என்றாலும்... ராகுல்காந்தி விளைந்தது இத்தாலி... அடங்காத அமைச்சர்..!

ராகுல் காந்தி இந்தியாவில் பிறந்து இருந்தாலும், அவர் இத்தாலியில் அவரது தாய் மாமா மடியில் அமர்ந்து மொட்டை போட்டுக் கொண்டார். அவரது தாயும், அவரது தாய் மாமாவும் இத்தாலியைச் சேர்ந்தவர்கள் என்பதில் மாற்று கருத்தே கிடையாது என்று தனியார் தொலைக்காட்சிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டியளித்த சம்பவம் மீண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

minister rajendra balaji speech... velusamy condemns
Author
Tamil Nadu, First Published Sep 20, 2019, 5:44 PM IST

ராகுல் காந்தி இந்தியாவில் பிறந்து இருந்தாலும், அவர் இத்தாலியில் அவரது தாய் மாமா மடியில் அமர்ந்து மொட்டை போட்டுக் கொண்டார். அவரது தாயும், அவரது தாய் மாமாவும் இத்தாலியைச் சேர்ந்தவர்கள் என்பதில் மாற்று கருத்தே கிடையாது என்று தனியார் தொலைக்காட்சிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டியளித்த சம்பவம் மீண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

minister rajendra balaji speech... velusamy condemns

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சமீபத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரைப் பற்றி தரக்குறைவாகப் பேசியிருந்தார். ஆங்கிலேயர்களை விரட்டப் போராடிய காங்கிரஸ் கட்சியில், வெள்ளையர்கள் தலைவராவதை ஏற்க முடியாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்தார். மேலும், மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததும், தலைவர் பதவி வேண்டாம் என்று பயந்தோடிவிட்டார் என அமைச்சர் கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ராஜேந்திர பாலாஜியை அரசியல் கோமாளி என விமர்சித்திருந்தார்.

minister rajendra balaji speech... velusamy condemns

இந்நிலையில், இதுகுறித்து தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில், விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமியும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் இந்த விவாதத்தில் பங்கேற்றனர். சோனியா காந்தி இந்தியர் இல்லை என்பதால், ராகுல் காந்தியும் இந்தியர் இல்லை. விதை இந்தியாவாக இருந்தாலும் விளைநிலம் இத்தாலி. ராகுல் இந்தியர் தான் என்றால் அவரது தாய்மாமன் யார்? அவரை யார் மடியில் அமரச் செய்து மொட்டை போட்டார்கள் எனக் ராஜேந்திர பாலாஜி குதர்க்கமாகக் கேள்வியெழுப்பி இருந்தார்.

minister rajendra balaji speech... velusamy condemns

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய திருச்சி வேலுசாமி, “சோனியா காந்தி, ராகுல் காந்தி பற்றி விளைநிலம் - வித்து என ஏதேதோ கருத்துச் சொல்லும் ராஜேந்திரபாலாஜியிடம் கேட்கிறேன், நீங்கள் தெய்வம் எனக் கொண்டாடும் எம்.ஜி.ஆரின் வித்தும், விளைநிலமும் எங்கே? அவர் தமிழரா? ‘அம்மா’ என நீங்கள் அழைக்கும் ஜெயலலிதா பிறந்தது எங்கே? அவரது அம்மா பிறந்தது எங்கே? நீங்கள் சொல்லும் வித்து - விதைநிலம் கதையெல்லாம் அவர்களுக்குப் பொருந்தாதா?” என அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பினார். இதனால் இந்த விவாதம் அரங்கே அனல் பறந்தது. 

Follow Us:
Download App:
  • android
  • ios