சட்டத்திற்கு விரோதமான தொழில் செய்பவர்கள்தான் அமமுகவில் உள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

 

வானகரத்தில் நடந்த கட்சி விழாவில் ‘அமமுகவை சேர்ந்தவர்கள் யாரும் எந்த காரணத்துக்காகவும் ஆளும் கட்சியினருடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்தார். மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அமமுகவில் இணையும் விழா நேற்று முன்தினம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய தினகரன், எத்தனையோ பேர் ஆளும்கட்சி காரர்கள் வீட்டுத் திருமணங்களுக்குச் செல்வதும், அமைச்சர்களுடன் சுமூகமாக உறவு வைத்துக்கொண்டும் இருக்கின்றனர்.

இதியும் படிங்க:- ஜல்லிக்கட்டு போராட்ட சாப்பாடு பார்சலில் காண்டம் ! திருமாவளவன் பேச்சால் சர்ச்சை !

நமக்கு எப்படி திமுக எதிரியோ, அப்படி இந்த துரோகிகளையும் ஒரு கை பார்க்க வேண்டும். அமைச்சர் பத்திரிகை கொடுத்ததால் சென்றோம் என காரணம் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே ஆளும் கட்சியினருடன் தொடர்பு வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க:-தாறுமாறாக அதிகரிக்கப்போகும் தங்கத்தின் விலை... இரண்டு மடங்காக உயர வாய்ப்பு..!

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘’ திமுகதான் எங்களுக்கு போட்டியே தவிர அமமுக எங்களுக்கு போட்டி இல்லை. மக்களவைத் தேர்தலுடன் அமமுக கதை முடிந்துவிட்டது. சட்டத்திற்கு விரோதமான தொழில் செய்பவர்கள்தான் அமமுகவுடன் உள்ளனர். தோல்வியின் உச்ச கட்டத்தில் உளறிக்கொண்டிருக்கிறார் தினகரன். விரக்தியின் வெளிப்பாடுதான் அவருடைய பேச்சு’’ என விளாசியுள்ளார்.