Asianet News TamilAsianet News Tamil

அங்கே 40 கோடி ரூபாய் இருக்கு... ஐடி துறையினரிடம் போட்டுக்கொடுக்கும் ராஜேந்திர பாலாஜி..!

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை நடந்த நிலையில், அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.40 கோடி பதுக்கி வைத்துள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

minister Rajendra Balaji...AMMK Candidate home 40 crore
Author
Tamil Nadu, First Published Apr 2, 2019, 3:42 PM IST

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை நடந்த நிலையில், அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.40 கோடி பதுக்கி வைத்துள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. minister Rajendra Balaji...AMMK Candidate home 40 crore

சாத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக சாடினார். டி.டி.வி.தினகரன் அதிமுக கட்சியை கைப்பற்ற தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் முதல்வர் பதவி ஆசையில் வெறிபிடித்து அலைந்து வருகிறார். திமுக இந்த தேர்தலில் அதிமுகவிடம் தோற்கும். சினம் கொண்ட சிங்கமான அதிமுக, மதம் கொண்ட யானை ஆன திமுகவை விரட்டியடிக்கும் என்றார்.

 minister Rajendra Balaji...AMMK Candidate home 40 crore

கொடநாடு விவகாரத்தில் முதல்வரை குறை கூறுகிறார் மு.க.ஸ்டாலின். இப்போது திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்டபோது ஏன் வாய் திறக்கவில்லை. கொள்ளையடித்த பணம் இருந்தால் வருமான வரித்துறையினர் சோதனை செய்யதான் செய்வார்கள். மக்கள் நீதி மையத்தில் வேட்பாளர்கள் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள். ஜெயிக்க முடியாத கட்சி என்ன வேண்டுமானாலும் கூறலாம். அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று குறிப்பிடலாம். நாங்கள் எப்போதும் எங்களது சாதனையை கூறியே ஓட்டு கேட்போம் என்று கூறினார்.

 minister Rajendra Balaji...AMMK Candidate home 40 crore

இதனையடுத்து சாத்தூர் அமமுக வேட்பாளர் எதிர்கோட்டை சுப்பிரமணியன் ரூ.40 கோடி பதுக்கி வைத்துள்ளார். அவரது வீட்டிற்கு எப்போது வருமான வரித்துறையினர் சோதனை வரும் என்று தெரியவில்லை என்று புதிய குண்டை தூக்கிபோட்டுள்ளார். ஈவிகேஎஸ். இளங்கோவன் ஒரு நகைச்சுவையாளர், நகைச்சுவையாக தான் பேசுவார். அவருக்கெல்லாம் யாரும் ஓட்டுப்போட மாட்டார்கள் என்று அனைத்து கட்சியினரையும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios