உங்க அய்யாவாலேயே முடியலியே தம்பி. நீ எங்களுக்கெல்லாம் கு....., உன்னால அதிமுகவை அழிக்க முடியுமா? அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது என கொஞ்சம் கூட நாகரீகமே இல்லாமல் திட்டிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கொச்சை கொச்சையாக பேசியுள்ளார்.

கைதட்டல், விசில் சத்தத்திற்காக எதிர்பார்ப்புக்குக் குறை வைக்காமல், மேடை நாகரிகம் பற்றி  துளியும் கவலைப்படாமல், மனம்போன போக்கில் பேசுவது கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு வாடிக்கையாகிவிட்டது. அப்படித்தான் நேற்று நடந்த நிகழ்ச்சியில் திமுகவையும், முக ஸ்டாலினையும் கடுமையாக, கேவலமாக, நாகரீகமே இல்லாமல் அசிங்கமான வார்த்தைகளால் தட்டித் தீர்த்துள்ளார்.

விருதுநகரில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவில், பேசிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி; அண்ணாவின் குடும்பத்தைக் காப்பாற்றியவர் ஜெயலலிதா. அண்ணாவை உரிமை கொண்டாடுகிற கட்சி, பேசுகின்ற தகுதி அதிமுகவுக்குத்தான் உண்டு.  இன்று ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுகவுக்குத் துளியும் இல்லை. அந்த யோக்கியதையும் ஸ்டாலினுக்குக் இல்லை. அண்ணாவைப் பற்றி அதிகம் விமர்சனம் பண்ணியவர்கள், காங்கிரஸைக் காட்டிலும் கருணாநிதிதான் அதிகமாக திட்டினார்.

அதிமுக தொண்டன் எப்படிப்பட்டவன் தெரியுமா? எதப் பத்தியும் கவலைப்பட மாட்டான். MLA  சீட் கேட்க மாட்டான். பிரசிடென்டுக்கு நிற்கமாட்டான். கவுன்சிலர்க்கு நிற்க சீட் கேட்க மாட்டான். அமைச்சர் ஆகணும்னு கனவு காணமாட்டான். எலக்ஷன் வந்துட்டா கொடியைப் பிடிச்சிக்கிட்டு, ரெட்டை இலைக்கு ஓட்டு போடுங்கன்னு கேட்கிற கூட்டம் இருக்கிற வரை அதிமுகவ ஒண்ணுமே பண்ணமுடியாது. காரணம் இது மனிதன் ஆரம்பித்த கட்சி இல்ல. புனிதர் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி, விழுவது போல தெரியும். ஆனால்.. விழாது, அப்படியே விழுந்தாலும் எழும்.

அதிமுகவை அழிப்பதற்கு கலைஞர் காலத்திலேயே 46 ஆண்டு காலமாக முயற்சி செய்து பார்த்தாரு. முடியவில்லை. இன்றைக்கு ஸ்டாலின் புறப்பட்டிருக்கிறார். உங்க அய்யாவாலேயே முடியலியே தம்பி. நீ எங்களுக்கெல்லாம் எம்மாத்திரம் ? உன்னால அதிமுகவை அழிக்க முடியுமா? உன்னால அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது. இனி வரும் எலக்ஷன்ல அதிமுக பயங்கரமாக ஜெயிக்கப்போகுது.  நாங்குநேரி.  விக்கிரவாண்டி ரெண்டுலயும் சூப்பரா ஜெயிக்கப் ஜெயிக்கும்.