வேலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அத்தொகுதியின் பல்வேறு இடங்களில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். அப்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அளித்து, குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுப்பது ஏமாற்றி திமுக ஜெயித்துவிட்டதாக குறிப்பிட்டார்.

தமிழகத்தில் அரை மணி நேரத்தில் ஆட்சியை மாற்றலாம் என்று நினைப்பதற்கு நாங்கள் என்ன குமாரசாமியா?  என கேள்வி எழுப்பிய அமைச்சர் ராஜேந்தி பாலாஜி நாங்கள் நினைத்தால் அரசியலில் இருந்து ஸ்டாலினை வெளியேற்ற முடியும் என தெரிவித்தார்.

ஆட்சி அமைக்க முக ஸ்டாலினுக்கு ஜாதகம் பொறுத்தம் இல்லை. வாரிசு அரசியலால் திமுகவிற்கு இனி வளர்ச்சி இருக்காது.  ஏற்கனவே அண்ணன் அழகிரியை காட்டிக் கொடுத்து தான் அவர் திமுக தலைவரானார். 

எதிர்கட்சித் தலைவராக இருந்தாலும் சட்டையைக் கிழித்துக் கொண்டுதான் அவரால் இருக்க முடியுமே தவிர அவரால் முதலமைச்சராக முடியாது என கூறினார்.

மக்களவைத் தேர்தலில் ஜெயித்து டெல்லி சென்றுள்ள திமுக எம்பிக்கள் காந்தி சிலை முன் போராட்டம்தான் நடத்துகின்றனர். அவர்களால் வேறு ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடியாக தெரிவித்தார்.