அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய பெண் இவர் தான்.. கைது எண்ணிக்கை 10ஆக உயர்வு..!

மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய சம்பவம் தொடர்பாக பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த சரண்யா, தனலட்சுமி, தெய்வாணை ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

minister ptr palanivel thiagarajan car sandal case..3 BJP Womens Arrested

மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய சம்பவம் தொடர்பாக பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த சரண்யா, தனலட்சுமி, தெய்வாணை ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். அதில், மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் உயிரிழந்தார். அவரது உடல் காஷ்மீரில் இருந்து கடந்த 13ம் தேதி மதுரை விமான நிலையத்திற்கு வந்தது. அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்த சென்றார். 

இதையும் படிங்க;- யார் இந்த டாக்டர் சரவணன்..! எத்தனை கட்சி மாறியுள்ளார் தெரியுமா..? அதிர வைக்கும் பரபரக்கும் தகவல்

minister ptr palanivel thiagarajan car sandal case..3 BJP Womens Arrested

அப்போது அங்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்ததால், அங்கு பாஜகவினர் குவிந்திருந்தனர். பாஜகவினரின் கூட்டத்தைப் பார்த்த அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் இவர்களுக்கு இங்கே என்ன வேலை என்று கேட்டதாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமடைந்த பாஜகவினர் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட போது தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது பெண் ஒருவர் செருப்பு வீசினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;- ஓஹோ நாளைக்கு பேசலாம் சொன்னதன் அர்த்தம் இதுதானோ.. 12 மணி நேரத்தில் பாஜக அலறவிடும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

minister ptr palanivel thiagarajan car sandal case..3 BJP Womens Arrested

இந்த சம்பவம் தொடர்பாக  பாஜக மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் குமார், மாவட்ட பிரசார பிரிவு செயலாளர் பாலா, திருச்சியை சேர்ந்த கோபிநாத், ஜெயகிருஷ்ணா, முகமது யாகூப் உள்ளிட்ட 7 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். 6 பேரையும் வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

minister ptr palanivel thiagarajan car sandal case..3 BJP Womens Arrested

இந்நிலையில்,  இந்த வழக்கில் தொடர்புடைய  பெண் நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த சரண்யா, தனலட்சுமி, தெய்வயானை ஆகிய மூன்று பெண்களை தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களில் தனலட்சுமி வீசிய காலணிதான் அமைச்சரின் கார் மீது பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே 7 பேர் கைதான நிலையில், மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க;-  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பை கழட்டி வீசிய பெண் இவர்தானா? வெளியான வீடியோ.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios