Asianet News TamilAsianet News Tamil

மோடியை சந்திக்க பிடிஆருக்கு சிறப்பு அழைப்பு.! மதுரை ஓட்டலில் தனியாக சந்தித்தது உண்மையா.? பிடிஆர் விளக்கம்

மதுரையில் தங்கியிருந்த பிரதமர் மோடியை சந்திக்க பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது தொடர்பாக தமிழக அமைச்சர் பிடிஆர் விளக்கம் அளித்துள்ளார். 

Minister PTR has given an explanation regarding his meeting with Prime Minister Modi KAK
Author
First Published Mar 5, 2024, 10:31 AM IST | Last Updated Mar 5, 2024, 11:12 AM IST

தமிழகத்தில் மோடி

நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 முறை தமிழகம் வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த மாதம் பல்லடம் பொதுக்கூட்டம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வழிபாட்டில் கலந்து கொண்ட பிறகு பிரதமர் மோடி மதுரையில் தங்கியிருந்தார். அப்போது பிரதமர் மோடியை சந்திக்க வருமாறு பிரதமர் அலுவலகத்தில் இருந்து 'ஹைலி சீக்ரெட் மோஸ்ட் இம்பார்ட்டென்ட்'  என்ற தலைப்பில் அமைச்சர் பிடிஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்த நாள் காலையில் பிரதமர் மோடியை அமைச்சர் பிடிஆர் முதல் ஆளாக சென்று சந்தித்தார்.

Minister PTR has given an explanation regarding his meeting with Prime Minister Modi KAK

பிரதமர் மோடியை சந்தித்து ஏன்.?

இந்த தகவலை பாஜகவினர் சமூகவலைதளத்தில் பரப்பி வரும் நிலையில், இது தொடர்பாக அமைச்சர் பிடிஆர் விளக்கம் அளித்துள்ளார். அதில், அரசியல் செய்யவதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். புயல் வந்தபோது மக்கள் பாதிப்படைந்திருந்தனர். அப்போது பிரதமர் மோடி வரவில்லையென தெரிவித்தார். அரசியல் மட்டும் செய்யாமல், அரசாங்க ரீதியாக தேவைகளை, கோரிக்கைகளை வேண்டுகோளை நிறைவேற்ற நியாயமாக செயல்பட்டால் இன்னும் நாங்கள் பாராட்டுவோம் என தெரிவித்தார். பிரதமரை சந்தித்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர்,  ''பிரதமர் எப்போ எல்லாம் ஒரு இடத்திற்கு செல்கிறாரோ, அப்போதெல்லாம் புரோட்டகால் அடிப்படையில் மரியாதை செலுத்தும் வகையில், வரவேற்பதற்கு, உதவி செய்வதற்கு, அவரது கான்வாயில் பயணம் செய்வதற்கு, வழி அனுப்பவது அரசின் பொறுப்பு. 

Minister PTR has given an explanation regarding his meeting with Prime Minister Modi KAK

பிரதமரை 4 முறை சந்தித்தேன்

அந்த வகையில் என் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து எனக்கு இந்தப் பணியை செய்ய கட்டளை வந்தது. அதை நிறைவேற்றினேன். இது அரசாங்கத்தோட பணி, தனி நபரின் விருப்பமோ, அரசியலோ இல்லையென தெரிவித்தார்.  இது தொடர்பாக மற்றொரு இடத்தில் பிடிஆர் கூறுகையில், ''தென் மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வந்த போது நான்கு முறை சந்தித்தேன். அவரை வரவேற்பதற்காக தமிழக அரசு எனக்கு இரண்டு முறை 'புரோட்டகால்' கொடுத்தது. முதலில் அனுப்பப்பட்ட புரோட்டகாலில் பிப்., 27ல் ஹோட்டலுக்கு சென்று பிரதமரை சந்திக்க வேண்டும் என்பது இல்லை. பிப்.,27 இரவு பிரதமர் அலுவலகம் விடுத்த சிறப்பு அழைப்பும் உண்மை. அப்போது மாநில அரசின் வழிகாட்டுதலையே பின்பற்றினேன்.

''பிரதமர் அலுவலகம் எனக்கு சிறப்பு அழைப்பு விடுத்த விவரத்தின்  நகல், பிரதமர் அலுவலகத்தில் இருந்து தமிழக தலைமைச் செயலருக்கும் சென்று விடும். பிரதமரிடம் அரசியல் பேசவில்லை. நான் மரியாதை நிமிர்த்தமாக அவரை வரவேற்றேன். அதற்காக என்னை 'தேங்க்யூ பாய்... என தட்டிக்கொடுத்ததாக அமைச்சர் பிடிஆர் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

நிர்மலா சீதாராமனா.? தமிழிசையா.? புதுவையில் களம் இறங்கப்போவது யார்.? பாஜக பட்டியலில் காத்திருக்கும் ட்விட்ஸ்ட்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios