minister pandiyarajan believes leaf symbol recover
இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக உடைந்ததால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது. இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றுவருகிறது.
இரட்டை இலை சின்னத்தை மீட்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் தினகரன் அணியும் தீவிரமாக உள்ளது.
இதற்கிடையே வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இரட்டை இலையை மீட்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெறும் முனைப்பில் இரண்டு அணிகளுமே உள்ளன.
இந்நிலையில், இரட்டை இலையை மீட்டு இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் குறித்து கட்சியின் முதல்வர் பன்னீர்செல்வமும் ஆட்சியின் முதல்வர் பழனிசாமியும் முடிவெடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
