Asianet News TamilAsianet News Tamil

ஆவடி மாநகர செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் நாசர் மகன் விடுவிப்பு... அறிவித்தார் துரைமுருகன்!!

ஆவடி மாநகர திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் நாசர் மகன் ஆசிம் ராஜா விடுவிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

minister nassar son released from the post of aavadi city dmk secretary
Author
First Published Feb 8, 2023, 12:14 AM IST

ஆவடி மாநகர திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் நாசர் மகன் அசிம் ராஜா விடுவிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் அசிம் ராஜா. இவர் திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட திமுக ஆவடி மாநகரச் செயலாளராக உள்ளார். அதுமட்டுமின்றி இவர் மாநகராட்சி கவுன்சிலராகவும் பொறுப்பு வகிக்கிறார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்த குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடியின் படங்களை அகற்றியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: உடன்கட்டை ஏறுவதை பெருமையாக பேசுவது வெட்கப்படவைக்கும் செயல்... பாஜக உறுப்பினருக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்!!

இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜக அசிம் ராஜாவின் செயல் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. இதனிடையே பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் படங்களை அகற்றும் அகம்பாவம், ஆணவம், திமிர் எங்கிருந்து வந்தது? இந்த குண்டர்களை தமிழக காவல்துறை உடனே கைது செய்ய மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியிருந்தர்.

இதையும் படிங்க: இனி எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது... ஜி.கே.மணி அதிரடி!!

இந்த நிலையில் ஆவடி மாநகர திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் நாசர் மகன் அசிம் ராஜா விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக ஆவடி மாநகர திமுக செயலாளராக சன்.பிரகாஷ் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios