Asianet News TamilAsianet News Tamil

சேலம் இனி 'திமுக'வின் கோட்டை - எடப்பாடி பழனிசாமியை எச்சரித்த அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம்

எடப்பாடி பழனிசாமியின் கோட்டையான ‘சேலம்’ இனி திமுகவின் கோட்டையாக மாறும் என்று கூறியிருக்கிறார் அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம்.

 

Minister mrk panneerselvam about admk edappadi palanisamy
Author
Salem, First Published Nov 20, 2021, 3:24 PM IST

சேலம் அஸ்தம்பட்டியில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் மற்றும்  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம், ‘கடந்த 4 ஆண்டுகளாக முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் மேம்பாலங்களை தவிர வேறு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. 

Minister mrk panneerselvam about admk edappadi palanisamy

தற்போது கடந்த 2 நாட்களில் மட்டும் பொதுமக்கள் அளித்துள்ள சுமார் 26 ஆயிரம் மனுக்களை அளித்துள்ளனர். அதற்கு இதுவே சாட்சியாகவே உள்ளது. சேலத்தில் தெருக்களில் மழைநீர் தேங்குகிறது. இது 6 மாதத்தில் உருவான பிரச்சினை இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள் ? ஒன்றும் செய்யவில்லை. இதனை மக்கள் அறிந்து உள்ளனர். எது எப்படியோ, ஓட்டு போட்டாலும், போடாவிட்டாலும் மக்களின் பிரச்சினைகளை திமுக அரசு தீர்க்கும்.

Minister mrk panneerselvam about admk edappadi palanisamy

மறைந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சேலத்தை தி.முகவின்  கோட்டையாக வைத்திருந்தார். அதேபோல், திருச்சியை எப்படி தி. மு. க. கோட்டையாக அமைச்சர் கே. என். நேரு வைத்திருக்கிறாரோ? அதேபோல், சேலத்தை மீண்டும் திமுக  கோட்டையாக மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டை இனி திமுகவின் கோட்டையாக மாறும்.வரப்போகின்ற மாநகராட்சி தேர்தல் இதை நிரூபிக்கும்’ என்று பேசினார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios