தமிழக அமைச்சரவையில் இருந்து, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் நீக்கப்பட்டுள்ளதா   அளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

அமைச்சர் மணிகண்டன்  ராமநாதபுரம் சட்டப்பேரவை தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் வகித்து வந்த தகவல் தொழில்நுட்பத்துறை, வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரையை ஏற்று அமைச்சரவையில் இருந்து மணிகண்டனை நீக்கி ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. 

முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் முதன் முறையாக அமைச்சர் ஒருவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் விமர்சித்து பேட்டி அளித்திருந்தநிலையில் மணிகண்டன் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.