minister know this?
மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார். அவருக்குப் பிடித்த சிலரை அழைத்து பார்த்தார். என்னிடம் பேசினார். இப்படியெல்லாம் கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திடீரென அந்தர் பல்டி அடித்தார்.
சசிகலாவைத் தவிர யாரும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை. சசிகலாவும் அவரது குடும்பமும் மட்டும்தான் ஜெயலலிதாவை பார்த்தார்கள். அமைச்சர்களோ கட்சியின் மற்ற நிர்வாகிகளோ ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஜெயலலிதாவின் மரணத்திற்கு சசிகலாவும் அவரது குடும்பமும்தான் காரணம் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
இப்படி முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என சசிகலா கூறியதைத்தான் ஊடகங்களிடம் தெரிவித்ததாக விளக்கம் அளித்தார்.
ஜெயலலிதா சாப்பிட்டதை பார்க்காமல் சசிகலா சொல்லியதை வைத்து ஊடகங்களிடம் தெரிவித்ததே தவறு. அதிலும் அமைச்சர் அளித்த விளக்கத்திலும்கூட சந்தேகமும் எதிர்க்கேள்வியும் எழுகிறது.
ஜெயலலிதா சாப்பிட்டதாக கூறுங்கள் என அமைச்சர்களிடம் சசிகலா கூறியிருந்தால், நீங்கள் அதை மட்டுமல்லவா கூறியிருக்க வேண்டும். அதை விடுத்து நான் ஜெயலலிதாவைப் பார்த்தேன். என்னிடம் பேசினார் என்றெல்லாம் பிதற்றியதற்கு யார் காரணம்? அதுவும் சசிகலாதான் சொல்லச்சொன்னாரா? இல்லை நீங்களாகவே பேசினீர்களா? என்ற கேள்வி எழுகிறது.
ஒருவேளை அதையும் சசிகலாதான் சொல்லச் சொன்னார் என்றால், சொல்பவர்களுக்கு சுயபுத்தி என்பதே கிடையாதா? என்ற கேள்வியும் எழுவது இயல்புதான்.
சசிகலா சொன்னதைத்தான் ஊடகங்களிடம் சொன்னோம் என்று கூறிய அமைச்சருக்கு பாடம் தேவைப்படுகிறது. இந்த திருக்குறளை படித்திருக்கிறீர்களா அமைச்சரே..?
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"
