இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் அசுர வேகம் எடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டன. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என அரசு அறிவித்திந்திருந்தது.

கொரோனா பரவுதல் அதிகரித்து வரும் சூழலில் டாஸ்மாக் கடைகளை திறப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். எனினும் தற்போதைய பொருளாதார நிலையை சுட்டிக்காட்டி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 44 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் இரண்டே நாளில் 294 கோடி அளவில் அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளது.

முதலாளியின் மனைவியை படுக்கைக்கு அழைத்த கார் டிரைவர்..! கழுத்தறுத்து கொடூரக் கொலை..!

இந்த நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எதற்காக திறக்கப்பட்டது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு பின்னால் பல்வேறு சமூக காரணங்கள் இருப்பதாகவும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை எனில் கள்ளச்சாராயம் பெருகி விடும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்த போதும் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா நோயை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.