minister jeyakkumar byte after ministers metting
தமிழகத்தில் இனி மக்கள் விரும்பும் அதிமுக இனி இருக்கும் எனவும் தினகரன் விலகுவது குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா குடும்பத்திற்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது. அதில் பேரிடியாக சசிகலா ஆதரவு அமைச்சர்களில் முக்கியவரான மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் 20 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் தினகரனுக்கு எதிராகவும் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் 20 அமைச்சர்கள் பங்கேற்றதால் கலங்கி போயுள்ளது சசிகலா வட்டாரம்.
அமைச்சர்கள் மட்டுமன்றி 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் , எம்பிக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தங்கமணி, வேலுமணி , ஜெயக்குமார், ஒ.எஸ் மணியன், எம்.ஆர். விஜயபாஸ்கர், வீரமணி, சரோஜா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எல்லோரையும் ஒன்றிணைத்து கட்சி நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம்
டிடிவி தினகரன் விலகுவது குறித்து விவாதிக்கவில்லை. இரு அணிகளை இணைக்கும் ஒ.பி.எஸ் கருத்தை வரவேற்கிறோம்.
தேர்தல் ஆணையத்திடம் பிரமான பத்திரம் வழங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தினோம்.
அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். இரட்டை இலையை மீண்டும் பெறுவதில் உறுதியாக உள்ளோம்.
சசிகலா தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாக வந்த தகவல் முற்றிலும் பொய்யானது.
மக்கள் விரும்பும் அதிமுக இனி தமிழகத்தில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் வேலுமனி பேசிய போது, நாங்கள் ஒரு குடும்பம் எங்கள் குடும்பத்தில் அண்ணன் தம்பி சண்டை அவ்வளவு தான்.. அது விரைவில் சரியாகும். சின்னத்தை நாங்கள் கைப்பற்றுவோம். என தெரிவித்தார்.
