Asianet News TamilAsianet News Tamil

எம்ஜிஆர் பாட்டு பாடி வாக்கு சேகரித்த அமைச்சர் ஜெயக்குமார்.. திமுகவை மரண பங்கம் செய்து அதிரடி..

ராயபுரம் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் எம்.ஜி.ஆர்.பாடல்களை பாடி  பிரச்சாரம் மேற்கொண்டார். அது அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டி.ஜெயக்குமார் ராயபுரம் தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில் இருக்கும் பெரியபாளையத்தம்மன் கோவிலில் இருந்து இன்று காலை பிரச்சாரத்தை தொடங்கினார். 

Minister Jayakumar who collected votes by singing MGR song .. Criticized dmk...
Author
Chennai, First Published Mar 24, 2021, 4:28 PM IST

ராயபுரம் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் எம்.ஜி.ஆர்.பாடல்களை பாடி  பிரச்சாரம் மேற்கொண்டார். அது அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டி.ஜெயக்குமார் ராயபுரம் தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில் இருக்கும் பெரியபாளையத்தம்மன் கோவிலில் இருந்து இன்று காலை பிரச்சாரத்தை தொடங்கினார். அதன் பின் பேட்டியளித்த அவர், மக்களிடையே மிகப்பெரிய எழுச்சி உருவாகியுள்ளது, எனவே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும் என்றார். 

Minister Jayakumar who collected votes by singing MGR song .. Criticized dmk...

மேலும், தொகுதி மக்களின் ஆதரவோடு தானும் வெற்றி பெறுவேன் என்றும், இஸ்லாமிய மக்கள் ஆரத்தி எடுப்பது என்பது பெரிய விஷயம், ஆனால் இந்த தொகுதியில் இருக்கும் இஸ்லாமிய மக்கள் தனக்கு ஆரத்தி எடுத்து, அவர்கள் கொடுக்கும் வரவேற்பானது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இனத்தை அழித்த கட்சி, கட்டப்பஞ்சாயத்து பண்ணும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்றார். திமுக இதுவரை இஸ்லாமியர்களுக்கு எதுவும் செய்ததில்லை என்ற அவர் திமுக ஆட்சியில் இஸ்லாமிகர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டுதான்இருந்தார்கள் என்றார். 

Minister Jayakumar who collected votes by singing MGR song .. Criticized dmk...

கருத்துக் கணிப்பு திமுகவுக்கு சாதகமாக வெளியாகி உள்ளதே என்ற கேள்விக்கு ? பதிலளித்த அவர், அது பணம் கொடுத்து செய்த வேலை என்றும், அந்த வேலையை செய்வதற்கு பிரசாந்த் கிஷோர் இருக்கிறார் என்றும், ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை என்று மக்களுக்கு நன்றாக தெரியும் எனவும் கூறினார். பாஜக சார்பாக முதலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் மேற்கொண்டார். அதேபோல பிரதமரும் பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என்ற அவர் அதை பாஜகவினர் முறையாக தெரிவிப்பார்கள் என்றார்.  

 

Follow Us:
Download App:
  • android
  • ios