துக்ளக் பத்திரிகையின் 50-ம் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் பரட்டை பற்ற வைத்ததால் தற்போது அது எரிந்து கொண்டிருக்கிறது என கிண்டல் செய்துள்ளார். 

துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் 50-வது ஆண்டு விழா மலரை வெளியிட்டார். இதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். பின்னர், விழாவில் பேசிய ரஜினிகாந்த், சேலத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியில் ராமர் - சீதையின் ஆடையில்லா படங்கள் செருப்பு மாலையுடன் இடம்பெற்றதாகவும், அதனை துக்ளக் பத்திரிகை மட்டுமே தைரியமாக வெளியிட்டதாகவும் பேசினார். 

இந்த தகவல் முற்றிலுமாக தவறானது என ரஜினிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினியின் இந்த பேச்சு அமைதியை குலைக்கும் விதமாக இருப்பதாக கூறி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ரஜினி மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவரது உருபொம்மையும் எரிக்கப்பட்டு, ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறுி வருகின்றனர். 

இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் சர்ச்சை கருத்தை பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும். பரட்டை பற்ற வைத்தது தமிழகம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் அரசு அனுமதிக்காது. ஹைட்டோ கார்பன் விவகாரத்தில் மக்களை திசைத்திருப்ப மு.க.ஸ்டாலின் முயல்கிறார் என்று குற்றம்சாட்டினார். 

விடியோவை பார்க்க: ரஜினியை வாரிய அமைச்சர் ஜெயக்குமார்..! வீடியோ